- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சூர்யவன்ஷி அறிமுகமானது ஹேப்பி தான்.. ஆனா சஞ்சு சாம்சன் செய்த இந்த விடயத்தை மறக்காதீங்க – அம்பத்தி ராயுடு

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியின் சார்பாக பிளேயிங் லெவனில் ஒரு முக்கியம் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் துவக்க வீரரான சஞ்சு சாம்சன் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக 15 வயதான வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.

வைபவ் சூர்யவன்ஷி குறித்தும், சாம்சன் குறித்தும் பேசிய : அம்பத்தி ராயுடு

இப்படி வைபவ் சூர்யவன்ஷி இந்த போட்டியில் அறிமுகமானது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது. அதேவேளையில் சஞ்சு சாம்சன் அணியிலிருந்து நீக்கப்பட்டது பெரியளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் உலககோப்பை தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தற்போது 3 போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்பதனால் நீக்கப்பட்டிருப்பது அனைவரது மத்தியிலும் விமர்சனத்தையும் சந்தித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய இந்த போட்டியில் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி குறித்தும், சஞ்சு சாம்சன் குறித்தும் பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் குறிப்பிட்டதாவது :

வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்காக அறிமுகமானது எனக்கு மகிழ்ச்சி தான். அவர் இந்திய அணியில் இடம்பெற வேண்டிய தகுதியான நபர் தான் ஆனாலும் ஒரு விடயத்தை மறந்து விடக்கூடாது. இந்த மூன்று போட்டிகளுக்கு முன்னதாக உலககோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் நமது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று தொடர் நாயகன் விருதினை வென்றிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளராக டி20 போட்டிகளில் அக்சர் படேல் நிகழ்த்திய – மாபெரும் சாதனை

எனவே அவரை இதுபோன்று ஒரு சில போட்டிகளில் வைத்து கணக்கிடக்கூடாது. என்னை பொறுத்தவரை அவர் நிச்சயம் மீண்டும் வலிமையான கம்பேக் கொடுப்பார். அவரிடம் இன்னும் சிறப்பான ஆட்டம் நிறைவே இருக்கிறது. அதேபோன்று வைபவ் சூர்யவன்ஷி நீண்ட கரியரை பெற வாழ்த்துக்கள் என்றும் அம்பத்தி ராயுடு பதிவிட்டிருந்தார்.

- Advertisement -