தெரியாம சொல்லிட்டேன். நான் திரும்பவும் வரேன். பி.சி.சி.ஐ க்கு கடிதம் எழுதிய – அம்பத்தி ராயுடு

Rayudu

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அம்பத்தி ராயுடு இந்திய அணிக்காக நான்காம் இடத்தில் களம் இறங்கி விளையாடி வந்தார். மிகவும் எதிர்பார்த்திருந்த நிலையில் உலக கோப்பை தொடரில் அவருக்கு விளையாடும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அம்பத்தி ராயுடு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தார்.

rayudu

அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிறகு தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் பி வி பார்த்தசாரதி கோப்பையில் விளையாடுவதற்காக சென்னை வந்துள்ள ராயுடு நேற்று பத்திரிகைகளுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியதாவது : உலக கோப்பையில் விளையாடுவதற்காக 4 ஆண்டுகளாக கடினமாக பயிற்சி செய்து வந்தேன்.

என்னை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யாததால் ஏமாற்றம் அடைந்தேன். இதனால் ஓய்வு பெற இதுதான் தருணம் என்று ஓய்வு முடிவை அதிரடியாக அறிவித்தேன். ஆனால் அது உணர்ச்சிவசத்தால் எடுக்கப்பட்ட முடிவு கிடையாது. எதிர்பார்த்த ஒன்று கிடைக்காமல் போனதால் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வது சரி என்று நினைத்து எடுத்த முடிவு தான். ஆனால் தற்போது மீண்டும் இன்னும் சில வருடங்கள் கிரிக்கெட் விளையாடலாம் என்று முடிவு செய்துள்ளேன். இது பற்றி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுத உள்ளேன்.

Rayudu

அதோடு ஐபிஎல் போட்டிகளிலும் நான் தொடர்ந்து விளையாடுவேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எனக்கு எப்போதும் ஆதரவு தந்துள்ளது. எனவே அந்த அணிக்காக நான் நிச்சயம் ஆடுவேன் என்னுடைய உடற்தகுதி சரி செய்துகொண்டு மீண்டும் பழைய இடத்திற்கு திரும்புவேன் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் அதை ஏற்றுக்கொள்வேன் என்று ராயுடு பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.