IPL 2023 : வெற்றிக் கோப்பையை ஜடேஜா – என் கையில் தோனி வாங்க வைத்தது ஏன்? நெகிழ்ச்சியான பின்னணியை பகிர்ந்த ராயுடு

Rayudu 2
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பரபரப்பான போட்டிகளுடன் மகிழ்வித்து வந்த ஐபிஎல் 2023 டி20 தொடரின் சாம்பியன் பட்டத்தை எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் சாதனை சமன் செய்தது. குறிப்பாக குஜராத்துக்கு எதிராக அதன் சொந்த ஊரான அகமதாபாத் மைதானத்தில் ரிசர்வ் நாளில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் கடுமையாக போராடிய சென்னைக்கு மோகித் சர்மா வீசிய கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது ரவீந்திர ஜடேஜா சிக்ஸரையும் பவுண்டரியும் அடித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

Rayudu

- Advertisement -

அப்படி பரபரப்பாக நடைபெற்ற அந்த ஃபைனலில் அனைவருமே வெற்றியில் முக்கிய பங்காற்றிய நிலையில் தன்னுடைய கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடிய நட்சத்திர வீரர் அம்பத்தி ராயுடு முக்கிய நேரத்தில் மோஹித் சர்மா வீசிய 6, 4, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டு 19 (8) ரன்களை விளாசி அழுத்தத்தை உடைத்து கோப்பையை வெல்ல உதவினார். ஹைதராபாத்தை சேர்ந்த அவர் 2010இல் மும்பை அணிக்காக அறிமுகமாகி 2013, 2015, 2017 ஆகிய வருடங்களில் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றியதை போல சென்னை அணியிலும் 2018, 2021, 2023 சீசன்களில் சாம்பியன் பட்டம் வெல்ல உதவிகரமாக செயல்பட்டார்.

தோனியின் பாராட்டு:
அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற வீரர் (தலா 6) என்ற ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்த அவர் தன்னுடைய கடைசி போட்டியில் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் கண்ணீர் மல்க விடை பெற்றார். இந்தியாவுக்காக 2013இல் அறிமுகமாகி 2018 வாக்கில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி 2019 உலகக் கோப்பையில் 4வது இடத்தில் விளையாடுவதற்கு தகுதியானவராக காத்திருந்த அவரை முப்பரிமாண வீரர் தேவை என்ற கண்ணோட்டத்துடன் கழற்றி விட்ட அப்போதைய எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு விஜய் சங்கரை தேர்வு செய்தது.

Rayudu

அதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தில் 3டி ட்வீட் போட்டதை வன்மமாக எடுத்துக் கொண்ட தேர்வுக்குழு மேற்கொண்டு வாய்ப்பு கொடுக்காமல் கழற்றி விட்டதால் மனமுடைந்து 33 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற ராயுடு ஐபிஎல் தொடரில் 6 கோப்பைகளை வென்று ஜாம்பவானாக ஓய்வு பெற்றுள்ளார். அந்த நிலையில் பொதுவாக எந்த தொடரிலும் கோப்பையை வென்ற பின் அதை கேப்டன் முதலில் வாங்கி பின்னர் அணியினரிடம் கொடுத்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கமாகும்.

- Advertisement -

ஆனால் ஐபிஎல் ஜாம்பவானாக ஓய்வு பெறும் ராயுடுவை பாராட்ட நினைத்த தோனி கோப்பையை அவரது கையிலும் கடைசி பந்தில் பவுண்டரியை அடித்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்த ஜடேஜாவின் கையிலும் கொடுக்குமாறு பிசிசிஐ தலைவர் மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரிடம் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையின் படி ராயுடு மற்றும் ஜடேஜாவின் கைகளில் கோப்பையை கொடுத்த பின்பு தான் தோனி வாங்கி இதர வீரர்களிடம் கொடுத்தார். அந்த நிகழ்வு ரசிகர்களின் நெஞ்சைத் தொட்ட நிலையில் அந்த சமயத்தில் தோனி ஏன் தமது கையில் கோப்பையை கொடுத்தார் என்ற பின்னணியை ராயுடு பகிர்ந்துள்ளார்.

rayudu 2

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்த விருது வழங்கும் விழாவுக்கு முன்பாக என்னையும் ஜடேஜாவையும் அழைத்த தோனி கோப்பையை வெல்லும் போது நீங்கள் இருவரும் அருகே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அது எனக்கும் ஜடேஜாவுக்கும் நன்றி தெரிவிப்பதற்கு சரியான தருணமாக இருக்கும் என்று தோனி நினைத்தார்”

இதையும் படிங்க:WTC Final : லார்ட்ஸ்னா பரவால்ல, ஓவலில் இந்தியாவிடம் ஆஸி ஜெயிப்பது கஷ்டம் தான் – மேத்தியூ ஹைடன் சொல்லும் காரணம் என்ன

“அது தான் அவருடைய ஸ்பெஷலான குணம் என்று நினைக்கிறேன். ஏனெனில் இதற்கு முன் வரலாற்றில் இது போன்ற நிகழ்வு நடந்ததாக நான் நினைக்கவில்லை. அது தான் தோனி. அந்த வகையான குணத்தை தான் அவர் கொண்டவர் என்பதை உலகமே அறியும். மொத்தத்தில் அது எங்களை பாராட்டுவதற்கு அவர் எடுத்த சொந்த முடிவாகும்” என்று கூறினார்.

Advertisement