அம்பதி ராயுடு பொருத்தமாக இருப்பார்..! இதில் அதிரடி காட்டுவார்..! சஞ்சய் பங்கர் கருத்து – இதுதான் காரணம்..?

Advertisement

இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அம்பதி ராயுடு ‘யோ யோ ‘ டெஸ்டில் தகுதி பெறாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அம்பதி ராயுடு இந்திய அணியில் பேட்டிங் தரவரிசை கீழ் ஆர்டர்களில் அதிரடியாக விளையடுவார் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கருத்து கூறியுள்ளார்.
rayudu
இதுவரை இந்திய அணியில் 34 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஆறு டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அம்பதி ராயுடு இதுவரை 1097 ரன்களை குவித்துள்ளார். மேலும், ஒருநாள் போட்டியில் 6 அரை சதம் மற்றும் 2 சதங்களையும் அடித்துள்ளார். நீண்ட காலமாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த அம்பதி ராயுடு சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடினார்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் விளையாடியா அம்பதி ராயுடு 16 போட்டிகளில் விளையாடி 602 ரன்களை குவித்தார். அதில் 5 அரைசதங்களும் ஒரு சதமும் அடங்கும். ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொள்ளவிருந்த இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பளிக்கபட்டது, ஆனால் ‘யோ யோ’ டெஸ்டில் தோல்வியடைந்து அந்த வாய்ப்பை கோட்டை விட்டார்.
sanjay-bangar
இந்நிலையில் அம்பதி ராயுடுவின் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் “ராயுடு மிடில் ஆர்டர்களில் சிறப்பாக ஆடக்கூடியவர். அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையடுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்பாராத விதமாக ‘யோயோ’ டெஸ்டில் அவர் தேர்ச்சி பெறவில்லை. அவர் தேர்ச்சி பெற்றால், நிச்சயம் இந்திய அணியில் இடம்பெறுவார்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement