ராகுல், விஜய் ஷங்கர் அசத்தல். ஆனால் 4 ஆவது இடத்திற்கு பெயர்போன இவர் டக் அவுட்டா ? – என்ன கொடுமை இது

Rayudu
- Advertisement -

இந்தியாவில் தற்போது உள்ளூர் மாநில அணிகளுக்கிடையேயான விஜய் ஹசாரே கோப்பை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், கேரளா அணியும் மோதின.

vijay hazare

- Advertisement -

ராபின் உத்தப்பா தலைமையிலான கேரளா அணியும் மற்றும் அம்பத்தி ராயுடு தலைமையிலான ஹைதராபாத் அணியும் நேற்று பெங்களூரு அருகிலுள்ள மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் கேரள அணி 227 ரன்கள் குவித்தது. அதனை துரத்த முடியாமல் ஹைதராபாத் அணி 165 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் கேரள அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் சிறப்பம்சம் யாதெனில் இந்திய அணிக்காக நான்காவது இடத்தில் பல போட்டிகளில் விளையாடி அனுபவம் வாய்ந்த வீரரான அம்பத்தி ராயுடு டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஏற்கனவே உலக கோப்பை தொடரில் அணியில் சேர்க்கப்படாத விரக்தியில் கிரிக்கெட்டை விட்டு விலகுவதாக ஓய்வு முடிவை அறிவித்த ராயுடு மீண்டும் தனது முடிவை வாபஸ் பெற்று தற்போது ஹைதராபாத் அணிக்காக விளையாட கிரிக்கெட்டிற்கு திரும்பினார்.

rayudu

இந்நிலையில் எதிர்பார்ப்பு அவர் மீது அதிகம் இருந்த நிலையில் அவர் டக் அவுட் ஆகி ஏமாற்றியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த தொடரில் ராகுல் சதமடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார். மேலும் தமிழக அணி சார்பாக விஜய் ஷங்கர் கடந்த போட்டியில் 91 ரன்கள் அடித்து தனது திறமையை நிரூபித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement