எவ்ளோ தான் பொறுத்துக்குவாரு, ராயுடு மாதிரி சஞ்சு சாம்சனின் கேரியரை முடிக்க பாக்குறீங்க – முன்னாள் பாக் வீரர் வேதனை

Sanju Samson Ambati Rayudu
- Advertisement -

நியூசிலாந்தில் விளையாடி வரும் இளம் இந்திய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரில் வென்றாலும் அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் சுமாராக செயல்பட்டு கோப்பையை நழுவ விட்டது. முன்னதாக உலகக் கோப்பையில் தோல்விக்கு காரணமாக அமைந்த ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுத்த இந்த சுற்றுப்பயணம் இளம் வீரர்களுக்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதில் காலம் காலமாக வாய்ப்புக்காக காத்துக்கிடக்கும் கேரளாவைச் சேர்ந்த இளம் வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் ஏமாற்றமடைய வைத்துள்ளது.

Sanju Samson

- Advertisement -

ஏனெனில் 2015இல் அறிமுகமாகி 2வது போட்டியை 2019இல் விளையாடிய அவலத்தை சந்தித்த சஞ்சு சாம்சன் 2021 வரை குப்பை போல பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்டு வந்தார். இருப்பினும் மனம் தளராமல் உள்ளூர் தொடரில் போராடி வந்த அவர் 2022 ஐபிஎல் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஃபைனலுக்கு அழைத்துச் சென்று பேட்டிங்கில் அதிரடியாக 400 ரன்களை குவித்து அசத்தினார். அதன் காரணமாக மீண்டும் இந்திய அணிக்குள் கம்பேக் கொடுத்த அவர் பெரும்பாலான போட்டிகளில் அசத்தலாக செயல்பட்டும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ரிசர்வ் பட்டியலில் கூட சேர்க்கப்படவில்லை.

ராயுடு மாதிரி:

அதனால் கொந்தளித்த ரசிகர்களின் கண்துடைப்புக்காக இந்திய ஏ அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட சஞ்சு சாம்சன் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட்வாஸ் வெற்றியை பதிவு செய்து அசத்தினார். அதனால் சமீபத்திய தென்னாபிரிக்க ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெற்று 3 போட்டிகளிலும் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய அவர் இந்த நியூசிலாந்து டி20 தொடரில் மீண்டும் வாய்ப்பு வரவில்லை. அதைவிட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயருடன் இணைந்து 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து முக்கியமான 36 ரன்கள் எடுத்து சிறப்பாக செயல்பட்டும் 6வது பவுலர் தேவை என்பதற்காக அடுத்த போட்டியிலே மனசாட்சியின்றி நீக்கப்பட்டார்.

Rishabh Pant Sanju Samson

ஆனால் அவருக்கு பதில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் இப்போது வரை 90% சொதப்பலாக செயல்பட்டும் ராஜா வீட்டுப் பிள்ளையை போல் ரிஷப் பண்ட் தொடர்ந்து வாய்ப்பு பெற்று வருகிறார். இந்நிலையில் இப்படி தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வரும் சஞ்சு சாம்சனின் கேரியரை அம்பத்தி ராயுடுவை போல் முடிக்கும் வகையில் இந்திய அணி நிர்வாகம் செயல்படுவதாக முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா வேதனை தெரிவித்துள்ளார். ஆரம்பம் முதலே சஞ்சு சம்சனுக்கு ஆதரவு கொடுத்து அவரும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அம்பத்தி ராயுடுவின் கேரியரும் இதே போல் தான் முடிந்தது. அவர் நிறைய ரன்கள் அடித்தும் இதே போன்ற நிலைமையை சந்தித்தார். பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவில் நடக்கும் உட்கட்சி அரசியலே இதற்கான காரணமாகும். அவர்கள் வீரர்களை விருப்பு வெறுப்பு அடிப்படையில் தேர்வு செய்கிறார்களா? ஒரு வீரர் எவ்வளவுதான் பொறுத்துக் கொள்ள முடியும்? கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சன் ஏற்கனவே இந்த கொடுமைகளை நிறைய பொறுத்துக் கொண்டு விட்டார்”

“இதே போன்ற நிலைமை நீடித்தால் ஒரு நல்ல வீரரை நாம் இழக்க நேரிடலாம். ஏனெனில் அவர் அணியில் தேர்வு செய்யப்படாமல் சித்திரவதைகளை எதிர்கொள்கிறார். ஆனால் அனைவரும் அவர் எக்ஸ்ட்ரா கவர், கவர் திசையிலும் ஃபுல் ஷாட் அடிப்பதையும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2017, 2018 ஆகிய காலகட்டங்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் அற்புதமாக செயல்பட்ட அம்பத்தி ராயுடு 2019 உலகக்கோப்பையில் தேர்வாக காத்திருந்தார்.

ஆனால் கடைசி நேரத்தில் முப்பரிமாண வீரர் தேவை என்று கருதிய தேர்வுக்குழு விஜய் சங்கரை தேர்வு செய்தது. அதனால் மனமுடைந்த ராயுடு விளையாட்டாக போட்ட 3டி ட்விட்டை வன்மமாக மாற்றிய அப்போதைய தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் அதன்பின் மொத்தமாக வாய்ப்பு கொடுக்காமல் கழற்றி விட்டார். அதனால் 35 வயதிலேயே ராயுடு ஓய்வு பெற்றது போல் தற்போதைய தேர்வுக்குழு மற்றும் அணி நிர்வாகம் நடந்து கொள்வதாக கனேரியா கூறியுள்ளார். இருப்பினும் அவை அனைத்தையும் சாம்சன் பொறுத்துக் கொள்வதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

Advertisement