- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கோலி அப்படி எதுவும் பண்ணல.. ராபின் உத்தப்பாவின் குற்றச்சாட்டை நிராகரித்த அம்பத்தி ராயுடு – விவரம் இதோ

கடந்த 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டார். அந்த தொடருக்கு முன்னர் வரை நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து அம்பத்தி ராயுடு நான்காம் இடத்தில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர்தான் இந்திய அணியின் நான்காவது இடத்தில் நிரந்தரமான பேட்ஸ்மேன் என்று அப்போது விராட் கோலியும் கூறியிருந்தார். இதன் காரணமாக 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் ராயுடு தேர்வு செய்யப்பட்டார்.

விராட் கோலி மீது எந்த தவறும் கிடையாது : அம்பத்தி ராயுடு

ஆனால் அந்த உலகக்கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு சில தினங்களுக்கு முன்னதாக அவர் வெளியேற்றப்பட்டு தமிழக வீரர் விஜய் சங்கருடன் இந்திய அணி இங்கிலாந்து சென்றது. அந்த தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி படுமோசமான தோல்வியை சந்திக்க சரியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இல்லாததே காரணமாக பார்க்கப்பட்டது.

- Advertisement -

அதோடு அந்த உலகக் கோப்பை தொடரை இந்திய அணி இழந்ததற்கும் நான்காவது இடத்தில் களமிறங்க சரியான வீரர் இல்லாததே காரணம் என்று பெரியளவில் பேசப்பட்டது. இந்நிலையில் அப்படி அம்பதி ராயுடுவை குறிவைத்து தூக்கியது விராட் கோலி தான் என்று முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா சில குற்றச்சாட்டுகளை ஒரு நேர்காணலின் போது முன் வைத்திருந்தார். அந்த வகையில் உத்தப்பா கூறுகையில் :

விராட் கோலிக்கு யாரையும் பிடிக்கவில்லை என்றால் அல்லது யாராவது சரியில்லை என்று உணர்ந்து விட்டால் உடனடியாக அவர்கள் அணியிலிருந்து நீக்கப்படுவார்கள். அந்த வகையில் தான் அம்பத்தி ராயுடுவும் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். இப்படி ராயுடுவை நம்ப வைத்து இறுதியில் ஏமாற்றியது விராட் கோலி செய்த மிகப்பெரிய தவறு என நேரலையில் பகிரங்கமாக தனது கருத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் ராபின் உத்தப்பாவின் அந்த கருத்தினை மறுத்து பேசியிருக்கும் அம்பத்தி ராயுடு கூறுகையில் : உத்தப்பா சொல்ல வந்தது கோலிக்கு விருப்பு, வெறுப்புகள் உள்ளன என்பதை மட்டும் தான். ஆனால் என்னை பொருத்தவரை விராட் கோலியால் என்னுடைய இடம் பறிபோகவில்லை. அவர் என்னை மிகவும் விரும்பினார். அவரது தலைமையின் கீழ் தான் நான் இந்திய அணிக்காக பல ஆட்டங்களில் விளையாடி இருக்கிறேன்.

இதையும் படிங்க : இதுமட்டும் இன்னொரு முறை நடந்தா நிச்சயமா பும்ராவோட கரியர் ஓவர் – எச்சரித்த ஷேன் பாண்ட்

எப்போதுமே அவர் எனக்கு ஆதரவாக தான் இருந்து வந்தார். அதனால் விராட் கோலி என்னை நீக்கியதாக நான் என்றும் கூறமாட்டேன். அது அணி நிர்வாகத்தின் ஒட்டுமொத்த முடிவாக தான் அப்போது இருந்தது. எனவே விராட் கோலியின் மீது எனக்கு எவ்வித வெறுப்பும் கிடையாது என ராயுடு இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -