தோனிக்கு கொஞ்சமும் சளைச்சவர் கிடையாது.. டிகே’வுக்கு கடைசியா நாம இதை செய்யணும்.. ராயுடு கருத்து

Ambati Rayudu 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களுடைய முதல் 7 போட்டிகளில் 6 தோல்விகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக ஹைதராபாத்துக்கு எதிராக ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு போராடி தோல்வியை சந்தித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 287 ரன்கள் குவித்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக சாதனை படைத்தது.

அதை சேசிங் செய்த பெங்களூருவுக்கு 42, கேப்டன் டு பிளேஸிஸ் 62, தினேஷ் கார்த்திக் 83 ரன்கள் அடித்து முடிந்தளவுக்கு போராடினர். ஆனால் இதர வீரர்கள் கை கொடுக்கத் தவறியதால் 20 ஓவரில் 262/7 ரன்கள் மட்டுமே எடுத்த பெங்களூரு பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. இருப்பினும் அப்போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஹைதராபாத்துக்கு பயத்தை காட்டும் வகையில் மிரட்டலாக பேட்டிங் செய்தார்.

- Advertisement -

ராயுடு ஆதரவு:
குறிப்பாக தமிழக வீரர் நடராஜன் வீசிய ஒரு பந்தில் மைதானத்திற்கு வெளியே 108 மீட்டர் சிக்சர் பறக்க விட்ட அவர் இந்த சீசனில் மிகப்பெரிய சிக்சரை அடித்த வீரராக சாதனையை படைத்தார். அந்த வகையில் 5 பவுண்டரி 7 சிக்சரை பறக்க விட்ட அவர் 83 (35) ரன்கள் குவித்தார். மேலும் இந்த வருடம் 7 போட்டிகளில் 226* ரன்களை 205.45 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வைத்துள்ள அவர் உச்சகட்ட ஃபார்மில் எதிரணிகளை பந்தாடி வருகிறார்.

சொல்லப்போனால் வர்ணனையாளராக மாறியதால் இந்தியாவின் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட அவர் 2022 சீசனில் 330 ரன்களை 183.33 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசினார். அதனால் 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்ற அவருக்கு மீண்டும் விரைவில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் தோனிக்கு நிகராக ஃபினிஷிங் செய்யும் திறமையை கொண்ட தினேஷ் கார்த்திக்கிற்கு கடைசி முறையாக டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கலாம் என்று ராயுடு கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவருடைய இளம் வயதிலிருந்தே எந்தளவுக்கு திறமையானவர் என்பதை நான் பார்த்து வருகிறேன். எப்போதும் எம்எஸ் தோனியை போன்ற சாயலை கொண்ட அவருக்கு தன்னுடைய திறமையை வெளிப்படுத்த போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை”

இதையும் படிங்க: ஆர்சிபி அணியில் என்னை ட்ராப் பண்ண சொல்லிட்டேன்.. காரணம் இது தான்.. மேக்ஸ்வெல் பரிதாப பேட்டி

“தற்போது அவருக்கு கடைசி முறையாக இந்தியாவின் மேட்ச் வின்னராக செயல்பட்டு உலகக் கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே கார்த்திக் உலகக் கோப்பைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். தற்போது அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனால் உலகக் கோப்பையில் இந்திய அணி வித்தியாசமானதாக இருக்கும். ஏனெனில் அங்கே அறிமுக வீரர்களையும் இம்பேக்ட் வீரர் விதிமுறையும் பார்க்க முடியாது என்பதால் பேட்டிங் சற்று அழுத்தமாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement