தாதாவா ? தலையா ? இருவரில் யார் சிறந்த கேப்டன் – இங்கி முன்னாள் கேப்டன் தேர்வு செய்தது யாருன்னு பாருங்க

Ganguly-dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஏழு வருடங்கள் கேப்டனாக இருந்தவர் சௌரவ் கங்குலி. அவர் கேப்டனாக பொறுப்பேற்ற போது இந்திய அணி பெரும் சிக்கலுக்கு உள்ளாகி இருந்த சூதாட்ட சர்ச்சை, இளம் அணி, தொடர் தோல்வி என பல பிரச்சனைகள் இருந்தது. ஆனால் இந்திய அணிக்கு தலைமை ஏற்று இவற்றை எல்லாம் பின்னுக்குத்தள்ளி ஆக்ரோசமாக அணியை வழி நடத்தி வெற்றி பெறச் செய்தார் கங்குலி.

sourav-ganguly-ms-dhoni

- Advertisement -

அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடருக்கு முன்னர் இந்திய அணி சற்று ஆட்டம் காணவே கேப்டன் பதவி டிராவிட் வசம் சென்றது. ஆனால் அவரது தலைமையிலும் இந்திய அணி உலகக்கோப்பை லீக் சுற்றில் பங்களாதேஷ் அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

இதன் காரணமாக இறுதியில் இந்திய அணியின் தலைமை பொறுப்பு தோனியிடம் சென்றது. இவரது தலைமையில்தான் இந்திய கிரிக்கெட் அணி மிகப் பெரும் வளர்ச்சியை அடைந்தது. மாபெரும் பல வெற்றிகளைப் பெற்றது. தோனியின் தலைமையில் 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை என பல உலக கோப்பைகளை வென்றுள்ளது.

Dhoni

இந்நிலையில் இந்த இருவரில் யார் சிறந்த கேப்டன் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் லம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கங்குலி மிகவும் ஷார்ப்பான மூளையை கொண்டவர். அவரை ஆடுகளத்தில் பார்க்க மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். ஆனால் இருவரில் தோனி தான் மிகச் சிறந்த கேப்டன், அவரைத்தான் நான் தேர்வு செய்வேன் என்று கூறியுள்ளார் லம்ப்.

lamb

மேலும் கங்குலி உருவாக்கி கட்டமைத்த அந்த அணியை தோனி சிறப்பாக வழிநடத்தி கோப்பைகளை கைப்பற்ற வைத்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இருவரும் சிறப்பான கேப்டன்களாக இருந்தாலும் தோனி ஐ.சி.சி யின் மூன்று வகை கோப்பைகளையும் இந்திய அணிக்காக வென்று கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement