இந்திய பவுலரான இவரே 3 வகையான கிரிக்கெட்டிலும் இப்போதைக்கு நம்பர் 1 – ஆலன் டொனால்டு

Donald
- Advertisement -

தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆலன் டொனால்ட் தென்னாப்பிரிக்க அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 72 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 330 விக்கெட்டுகளையும், 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 272 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். தான் விளையாடிய காலத்தில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக விளங்கியவர் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருக்கும் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

donald 1

- Advertisement -

அதன்படி 54 வயதான ஆலன் டொனால்ட் யூடியூப் மூலம் அளித்த பேட்டியில் தற்போதைய கிரிக்கெட் வீரர்களில் சிறப்பாக பந்துவீசி வரும் பவுலர்கள் குறித்து பேசியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் என்னை மிகவும் ரசிக்க வைக்கிறார்கள்.

2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு நியூஸிலாந்து அணியில் ஏகப்பட்ட திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகியுள்ளனர். ட்ரென்ட் போல்ட், நீல் வாக்னர், ஜேமிசன் போன்ற வீரர்கள் என்னை ஈர்த்துள்ளனர். அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியாவில் மிட்செல் ஸ்டார்க், சவுத் ஆப்பிரிக்க அணியின் நோர்க்கியா போன்றோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.

Bumrah

ஆனால் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். அவருடைய வேகம் மற்றும் திறன் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்களில் அவரை தனியாக முன்னிறுத்தி காட்டுகிறது. டி20, ஒருநாள், டெஸ்ட் என எந்த வகை கிரிக்கெட்டிலும் தனக்கென தனி பாணியை கடைபிடித்து வரும் பும்ரா சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.

Bumrah-1

என்னை பொருத்தவரை மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அவரே தற்போதைய உலகின் நம்பர் ஒன் பவுலர் என ஆலன் டொனால்டு தெரிவித்தார். 27 வயதான பும்ரா இதுவரை 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 95 விக்கெட்டுளையும், 67 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 108 விக்கெட்டுகளையும், 49 டி20 போட்டிகளில் விளையாடி 59 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement