இந்திய வீரரான இவர் ஆஸ்திரேலிய அணியில் ஆட விருப்பப்பட்டால் தாராளமாக விளையாடலாம் – அழைப்பு விடுத்த ஆலன் பார்டர்

Border
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரை முடித்த கையோடு இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரில் விளையாட உள்ளனர். அதற்காக ஆஸ்திரேலியா சென்றடைந்த வீரர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்திக் கொண்டு வருகிற 27-ஆம் தேதி சிட்னியில் நடைபெறும் முதலாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள்.

INDvsAUS

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடர் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ஆலன் பார்டர் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விருப்பப்பட்டால் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடலாம் என்றும் அழைப்பினை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் : விராட் கோலி இந்திய அணிக்கு பல ஆண்டுகளாக முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார். புதிய இந்திய அணியின் அசைக்க முடியாத அங்கமாக இருக்கிறார்.

border 1

அவர் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட விரும்பினால் எந்த நேரமும் அவரை வரவேற்க தயாராக இருக்கிறோம். அதேபோன்று அவருக்கு பிறக்கும் குழந்தை ஆஸ்திரேலிய மண்ணில் பிறந்தால் அதை நாங்கள் ஆஸ்திரேலிய குடிமகனாகவே கருதுவோம் என்று ஜாலியாக கூறினார்.

அதுமட்டுமின்றி கோழியின் ஆக்ரோஷம் மற்றும் அசாத்தியமான பேட்டிங் திறமை இரண்டிற்கும் நான் பெரிய ரசிகன் அவர் விளையாடும் போது நான் போட்டியை ரசிக்க ஆவலுடன் உள்ளேன் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement