இந்திய அணியில் இருக்கும் இந்த 2 பவுலரும் ரொம்ப டேஞ்சர். பாத்துதான் விளையாடனும் – அலெக்ஸ் கேரி ஓபன் டாக்

Carey

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாட இருக்கிறது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 27ஆம் தேதி சிட்னி மைதானத்தில் துவங்கப் போகிறது. இதற்காக இந்திய வீரர்கள் 32 பேர் ஆஸ்திரேலியாவிற்கு சென்றிருக்கின்றனர். சிட்னி நகரத்திற்கு வெளியே இருக்கும் ஒரு சொகுசு விடுதி ஒன்று 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

INDvsAUS

மேலும் அவ்வப்போது பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரி இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை பார்த்து மிரண்டு போய் பேட்டி கொடுத்திருக்கிறார். அவர் கூறுகையில்…

ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சமி ஆகிய இருவரும் மிக முக்கியமான பந்துவீச்சாளர்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது எங்களது வேலை. அதே நேரத்தில் அவர்களுக்கு ஈடு கொடுக்கும் பேட்ஸ்மேன்களும் எங்களது அணியில் இருக்கிறார்கள். அந்த வீரர்கள் மீது மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை ஏற்கனவே நன்றாக ஆடி பழக்கப்பட்ட வீரர்கள்

ind

இது ஒரு பக்கமிருக்க இந்திய சுழற்பந்து வீச்சாளர் களையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அவர்களும் சரிக்கு சமமானவர்கள். எங்களது அணியிலும் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா போன்ற மிகச் சிறந்த பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். இரு அணியிலும் சரிக்கு சமமான வீரர்கள் இருப்பதால் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் அலெக்ஸ் கேரி.

- Advertisement -

Shami

டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட இருப்பதால் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொடரை முதல் போட்டி 27 ஆம் தேதி துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.