இவங்க 2 பேர எதிர்த்து விளையாடும் போது ஜாக்கிரதையா தான் இருக்கனும் – பயத்தை ஒப்புக்கொண்ட ஆஸி வீரர்

australianteam

இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோத இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு பயிற்சிகளை செய்து வருகிறது. மேலும் இந்த தொடருக்கான மூன்று விதமான அணி வீரர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு தொடருக்காக ஆயத்தமாகி வருகின்றனர்.

INDvsAUS

இந்த தொடர் குறித்து பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களும் தங்களது கருத்தினை தெரிவித்து வரும் நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி இந்திய அணிக்கு எதிரான தொடர் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இந்திய அணியில் பும்ரா மற்றும் சமி ஆகியோர் மிகச்சிறந்த பவுலர்கள். அவர்கள் சர்வதேச தரத்தில் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். அவர்கள் இருவரும் எவ்வளவு முக்கியம் என்று அனைவருக்கும் தெரியும். அதனால் அவர்கள் இருவருக்கும் எதிராக நாங்கள் எதிராக எச்சரிக்கையாக விளையாடுவோம்.

Bumrah-1

அதே வேளையில் எங்கள் அணியில் திறமையான பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். வார்னர் மற்றும் பின்ச் ஆகியோர் இந்திய பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடி இருக்கின்றனர். இந்த தொடரில் எங்களின் அணி பவுலர்கள் எவ்வாறு பந்து வீசுகிறார்கள் என்று பார்க்க ஆவலுடன் இருக்கிறேன் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

shami

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி சிட்னி நகரில் 27 ஆம் தேதி துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.