IND vs AUS : ரோஹித் 150 ரன்களுடன் வெற்றியும் விட்டாரு, 4வது போட்டில எங்களோட பலத்தை காட்ட போறோம் – ஆஸி வீரர் எச்சரிக்கை

Alex Carey
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டு 2004க்குப்பின் தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. அதை விட கேப்டன் பட் கமின்ஸ், டேவிட் வார்னர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் வெளியேறியதால் 4 – 0 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா ஒயிட் வாஷ் தோல்வியை சந்திப்பது உறுதி என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் அதிகமாக சுழன்ற பிட்ச்சில் கச்சிதமாக செயல்பட்ட ஆஸ்திரேலியா இந்தியாவை 109, 163 ரன்களுக்கு சுருட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Pujara

- Advertisement -

அதனால் ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களது நம்பர் ஒன் இடத்தை காப்பாற்றிக் கொண்ட ஆஸ்திரேலியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியது. மறுபுறம் முதலிரண்டு போட்டிகளில் வென்ற மமதையில் 3வது போட்டியில் அஜாக்கிரதையாக செயல்பட்ட இந்தியா அகமதாபாத் நகரில் நடைபெறும் கடைசிப் போட்டியில் வென்றால் தான் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சொதப்பியது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

தவறவிட்ட ரோஹித்:
2வது நாளில் அஷ்வினை முன்கூட்டியே பந்து வீச அழைக்காதது, நல்ல பார்மில் இருந்தும் அக்சர் படேலை முன்கூட்டியே பேட்டிங் செய்ய அனுப்பாதது போன்ற முக்கிய கேப்டன்ஷிப் முடிவுகளில் சொதப்பிய அவர் முதல் இன்னிங்ஸில் முதல் ஓவரிலேயே எட்ஜ் மற்றும் எல்பிடபிள்யூ கொடுத்தும் நடுவர் அவுட் கொடுக்காததை ஆஸ்திரேலியா ரிவியூ எடுக்க தவறியதால் தப்பினார். ஆனால் அப்படி முதல் ஓவரிலேயே கிடைத்த 2 அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி 150 ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா மீண்டும் அவுட்டாகி வெற்றியை தவற விட்டு விட்டதாக ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் 3வது போட்டியில் வென்ற புத்துணர்ச்சியுடன் 4வது போட்டியில் தன்னுடைய பலமான ஸ்வீப் ஷாட்களை பயன்படுத்தி வெற்றிகரமாக செயல்பட இருப்பதாகவும் இந்தியாவை எச்சரிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “முதல் ஓவரிலேயே 2 ரிவியூக்களை தவற விட்டும் வென்றது நல்ல உணர்வை கொடுத்தது. குறிப்பாக எட்ஜ் கொடுத்ததை ரிவ்யூ எடுக்காமல் தவற விட்டதை பெரிய திரையில் பார்த்த போது அதை பயன்படுத்தி ரோகித் சர்மா நன்கு செட்டிலாகி 150 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை அடிப்பார் என்று நினைத்தேன். நல்ல வேளையாக அது நடைபெறவில்லை”

- Advertisement -

“முதல் போட்டியில் என்னுடைய பலத்தை நம்பியிருந்த நான் 2வது போட்டியில் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்த போது ஆட்டமிழந்தேன். அது எனக்கு மகிழ்ச்சியா? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. எனவே என்னுடைய அணுகு முறையில் நான் தொடர்ந்து செயல்படலாம் என்று நினைக்கிறேன். குறிப்பாக அதை நீங்கள் அதிகமாக துரத்தினால் அதுவே உங்களுக்கு ஆபத்தாக மாறிவிடும் என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். எனவே கடைசி போட்டியில் மீண்டும் என்னுடைய பலத்திற்கு ஏற்ப விளையாடி ஸ்வீப் ஷாட்களை அடித்து ரன்களை குவிக்க முயற்சிக்க உள்ளேன்”

Carey

“இந்தியாவில் உங்களது அணுகுமுறைகளை மாற்றினால் அது உடனடியாக உங்களுக்கு பின்னடைவை கொடுக்கிறது. எனவே நான் நேர்மறையான அணுகு முறையுடன் தொடர்ந்து விளையாட உள்ளேன். அதே போல எங்களது அணியில் டிராவிஸ் ஹெட் இயற்கையாகவே அதிரடி காட்டுபவர். பீட்டர் ஹேண்ட்ஸகோம்ப் மெதுவாக விளையாடக் கூடியவர்”

இதையும் படிங்க:ஸ்பான்சர் கூட இல்லாத பேட் – ரோல் மாடல் தோனி, திறமையான ஏழை இளம் இந்திய வீராங்கனைக்காக எக்லஸ்டென் கோரிக்கை

“ஸ்டீவ் ஸ்மித் அவருடைய வழியில் விளையாடுவார். எனவே எங்களது அணியில் வித்தியாசமான அணுகுமுறைகள் உள்ளன. அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து அகமதாபாத் நகரில் நடைபெறும் கடைசி போட்டியிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று கூறினார்.

Advertisement