கிரிக்கெட் உலகின் டாப் 5 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த அலைஸ்டர் குக் – வெளியிட்ட வீரர்களின் பட்டியல் இதோ

- Advertisement -

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான அலைஸ்டர் குக் இங்கிலாந்து அணிக்காக 161 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அனுபவம் மிக்க வீரராக வலம் வந்த அலைஸ்டர் குக் தற்போது தான் விளையாடிய காலத்தில் தலை சிறந்த 5 பேட்ஸ்மேன்கள் தேர்வு செய்துள்ளார் .

cook1

- Advertisement -

கொரோனா வைரஸ் பாதிப்பினால் கிடைத்துள்ள இந்த ஓய்வு நேரத்தில் பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களுக்கு பிடித்த பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் மற்றும் பிடித்த அணி என பட்டியலிட்டு தங்களது விருப்பத்தை கூறிவரும் நிலையில் அலைஸ்டர் குக் தற்போது தனக்கு பிடித்த தலை சிறந்த 5 (பேட்ஸ்மேன்கள்) வீரர்களை தேர்வு செய்துள்ளார்.

அதன்படி அவர் தேர்வு செய்துள்ள பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியை அவர் தேர்வு செய்துள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தரவரிசையில் டாப் ரேங்கில் இருப்பதனாலும், மூன்று வகை கிரிக்கெட்டிலும் சராசரி 50 ரன்களுக்கு மேல் வைத்துள்ளதாலும் அவரை தேர்வு செய்துள்ளார்.

Kohli-1

அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் இடது கை பேட்ஸ்மேனான பிரைன் லாரா சேர்த்துள்ளார். அவர் விளையாடிய காலத்தில் தலை சிறந்த பேட்ஸ்மென் என்று புகழ்ந்துள்ளார். அதற்கடுத்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டர் ஜேக் கல்லீஸ் மற்றும் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் சங்ககாரா ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்காக 59 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ள அலைஸ்டர் குக்பாண்டிங், கல்லீஸ் மற்றும் சங்கக்காரா என்ற இந்த மூன்று வீரர்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியுள்ள அனுபவம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதில் முக்கிய விடயமாக பார்க்கப்படுவது யாதெனில் 200 போட்டிகளில் விளையாடியுள்ள சச்சினுக்கு இந்த பட்டியலில் இடமில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

sachin

அலைஸ்டர் குக் தேர்வு செய்த 5 சிறந்த வீரர்கள் இதோ : விராட் கோலி, பிரையன் லாரா, ரிக்கி பாண்டிங், ஜேக் கல்லீஸ், குமார் சங்கக்காரா

Advertisement