ஆஷஸ் 2025-26 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. அத்தொடரில் முதல் 3 போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. மறுபுறம் பஸ்பால் அணுகு முறையில் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியாவில் கோப்பையை வெல்வோம் என்ற சவால் விட்ட இங்கிலாந்து தொடர்ந்து 15வது வருடமாக படுதோல்வியை சந்தித்தது.
இருப்பினும் 4வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதனால் 15 வருடங்கள் 16 தொடர் தோல்விகளுக்கு பின் ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்ற இங்கிலாந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் பலவீனமாக இருப்பதாக அந்நாட்டின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் கவலைத் தெரிவித்துள்ளார்.
இந்தியா பலம் இல்லை:
சில மாதங்களுக்கு முன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரை 2 – 2 (5) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. ஆனால் அடுத்து நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 25 வருடங்கள் கழித்து இந்தியா 0 – 2 (2) என்ற கணக்கில் சொந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்தது. இதிலிருந்து இங்கிலாந்தில் தொடரை சமன் செய்யும் அளவுக்கு தற்போதைய இந்திய அணி அவ்வளவு தரமானது கிடையாது என்று குக் கூறியுள்ளார்.
அந்தளவுக்கு இங்கிலாந்து அணி சுமாராக இருப்பதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். எனவே இந்த நிதர்சனத்தை புரிந்து கொண்டு இங்கிலாந்து அணியை முன்னேற்றும் வழியைப் பார்க்குமாறு தங்கள் நாட்டு வாரியத்தை கேட்டுக் கொள்ளும் குக் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்த இங்கிலாந்து அணிக்கும் கவுன்ட்டி அணிக்கும் இடையே தற்போது மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது”
இங்கிலாந்து தான் பலவீனம்:
“அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்று நான் கருதுகிறேன். ஏனெனில் நீங்கள் நம்முடைய கவுன்டி தொடரில் அல்லது அங்குள்ள பிட்ச்களில் தொடர்ந்து ரன்கள் அடிக்கும் முறை ஏதோ ஒரு வழியில் உங்களுடைய டெஸ்ட் அணியில் பாதை போடும். எனவே அது கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ராப் கீ (வாரிய இயக்குனர்), ப்ரெண்டன் மெக்கல்லம் (பயிற்சியாளர்) ஆகியோரையும் அவர்களுடைய சிந்தனைகளையும் நான் விரும்புகிறேன்”
இதையும் படிங்க: சி.எஸ்.கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.. ஆனா துணை கேப்டன் யார் தெரியுமா? – வெளியான தகவல்
“ஆனால் அவர்கள் இந்த மிகப்பெரிய தொடரிலிருந்து தங்களுடைய கண்களை அகற்றி விட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். நாம் இந்தியாவிடம் தோற்றத்தை பற்றி பேசுகிறோம். நமக்கு எதிராக தொடரை சமன் இந்தியா அடுத்ததாக தென்னாபிரிக்காவிடம் துடித்தனர். எனவே அந்த இந்திய அணி அவ்வளவு சிறந்த அணியும் கிடையாது. உண்மை தான் நம்முடைய இங்கிலாந்து அணியை தாக்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.



