பும்ரா ஜோக் செய்றாரு வேற லெவல்.. ஆஸியை அங்க இந்தியா நொறுக்குவாங்க நினைக்கல.. குக், ஃபின் பாராட்டு

- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 1 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா இரண்டாவது போட்டியில் விளையாட தயாராகி வருகிறது. முன்னதாக பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 150க்கு ஆல் அவுட்டானது.

அப்போது தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு அபாரமாக பந்து வீசிய கேப்டன் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலியாவை 104க்கு சுருட்ட உதவினார். அதனால் உத்வேகமடைந்த இந்தியா விராட் கோலி 100*, ஜெய்ஸ்வால் 161, ராகுல் 77 ரன்கள் எடுத்த உதவியுடன் 534 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அப்போது மீண்டும் அதிரடியாக பந்து வீசிய பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

சிறந்த பும்ரா:

இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா உலகின் சிறந்த பவுலர் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீபன் ஃபின் வியப்பான பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜெய்ஸ்வால் 161 ரன்களை சிறப்பாக குவித்தார். ஆனால் தற்சமயத்தில் உலகின் சிறந்த வீரராக செயல்படும் ஜஸ்ப்ரித் பும்ராவின் செயல்பாடுகளை தான் நான் விரும்பி பார்த்தேன்”

“தற்போது யாரும் அவரை போல் இல்லை. உண்மையில் அவர் விளையாடுவது ஜோக் போல இருக்கிறது. ஏனெனில் நீங்கள் பார்க்கும் போது அவர் அந்தளவுக்கு அசத்தலாக செயல்படுகிறார். நல்ல வேளையாக அவரை எதிர்கொள்ள நான் என்னுடைய காலில் உபகரணங்களை அணியாமல் இருக்கிறேன்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் இந்தியாவின் வெற்றி பற்றி முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பெர்த் நகரில் அபாரம்:

“பெர்த் மைதானத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை இப்படி சுத்தியால் அடித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் பெர்த் பொதுவாக விளையாடுவதற்கு மிகவும் கடினமான இடமாகும். இம்முறை அப்போட்டி வாகா மைதானத்தில் நடைபெறவில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் ஆப்டஸ் மைதானத்தைப் பற்றியும் எனக்கு தெரியும்”

இதையும் படிங்க: ஐபிஎல் 2025: ராகுல், டு பிளேஸிஸை விட .. அவர் தான் டெல்லிக்கு சரியான கேப்டன்.. ஆகாஷ் சோப்ரா

“வரலாற்றில் அங்கே ஆஸ்திரேலியா இப்படி நிறைய தோல்விகளை சந்திக்க மாட்டார்கள். அதையும் தாண்டி வென்ற இந்திய மிகவும் தைரியத்துடன் செயல்பட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார். இதை அடுத்து அடிலெய்ட் நகரில் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வதற்கு இந்தியா தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement