இந்திய – இங்கிலாந்து பவுலர்கள் அடிக்கடி அதைக் கேட்டு அழுது புலம்புவது எனக்கு பிடிச்சுருக்கு.. அலெஸ்டர் குக் கிண்டல்

Alastair Cook
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை 2வது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. ஆனால் 3வது போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை போராடி தோற்கடித்த இங்கிலாந்து 2 – 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக இங்கிலாந்தில் இருக்கும் மைதானங்கள் வேகம், ஸ்விங், ஈரப்பதம் ஆகியவற்றது சாதகமாக இருப்பது வழக்கமாகும். அதனால் அங்கு பிரத்தியேக டுக் பந்துகள் பயன்படுத்தப்படுவது வழக்கமாகும். ஆனால் சமீப காலங்களில் அந்த பந்துகள் மிகவும் வேகமாக தன்னுடைய மென்மைத்தன்மை மற்றும் வடிவத்தை இழந்து விடுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

புலம்பி அழும் இந்திய பவுலர்கள்:

அது பற்றி 2வது போட்டியின் முடிவிலேயே இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அதிருப்தியை வெளிப்படுத்தின. அதன் உச்சமாக 3வது போட்டியில் முதல் நாள் மாலையில் மாற்றப்பட்ட பந்து 10.2 ஓவரிலேயே தன்னுடைய வடிவத்தை இழந்தது. அதனால் இந்திய அணியினர் வேறு பந்தைக் கேட்டனர். அதற்கு அதை விட மோசமான பந்தை நடுவர் கொடுத்தார்.

அதை ஏற்க மறுத்த இந்திய கேப்டன் சுப்மன் கில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை உண்டாக்கியது. அதே போல “ஒரு பந்து 10.2 ஓவர்கள் கூட தாங்கவில்லை என்றால் ஏதாவது செய்தாக வேண்டும்” என்று இங்கிலாந்து ஜாம்பவான் ஸ்டுவர்ட் ப்ராட் ட்விட்டரில் விமர்சனம் செய்திருந்தார். கடைசியில் அந்தப் பந்து இந்திய அணிக்கு பாதகத்தை உண்டாக்கியது வேறு கதை.

- Advertisement -

குக் கிண்டல்:

இந்நிலையில் இத்தொடரில் இந்திய – இங்கிலாந்து பவுலர்கள் அடிக்கடி வேறு பந்தை கொடுக்குமாறு நடுவர்களிடம் கேட்டு புலம்பி அழுவதைப் பார்ப்பது தமக்குப் பிடித்திருப்பதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் வெளிப்படையாக கிண்டலடித்துள்ளார். இது பற்றி பிபிசி ஸ்போர்ட் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “பவுலர்கள் எப்படி அதற்காக எப்போதும் புலம்புகிறார்கள் என்பதை நான் விரும்புகிறேன்”

இதையும் படிங்க: ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவின் தோல்வி நாயகனா இருப்பது அசாதாரணமானது.. ரெக்கார்ட் பற்றி டேவிட் லாய்ட்

“அத பவுலர்கள் மோசமான பந்தை வீசி விட்டு தங்கள் மேலே எந்த தவறுமில்லை, பந்து மேலே தான் தவறு என்று சொல்வது போலிருக்கிறது. அவர்கள் கால் தடத்தில் பந்தை வீசுகிறார்கள். ஒருவேளை அது மோசமான பந்தாக அமைந்தால் உடனடியாக வடிவத்தைக் குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையில் பந்தின் வடிவம் மாறுவது பேட்ஸ்மேன்களுக்குத் தான் பிரச்சனையை ஏற்படுத்தும். அந்தப் பந்துகளில் கவர் டிரைவ் அடிப்பதை விட வேறு மோசமான விஷயம் இருக்காது. அது எங்கே வேண்டுமானாலும் செல்லலாம்” என்று கூறினார்.

Advertisement