157 டெஸ்ட் போட்டிகள்.! பிரேக் எடுக்க போகும் அலைஸ்டெர் குக்.! அடுத்த போட்டிக்கு லீவ்.!

இந்தியாவிற்கு மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி சவுத்தாம்ப்டன் நகரில் துவங்க உள்ளது. இதற்கான இங்கிலாந்து அணியில் இருந்து துவக்க ஆட்டக்காரரான அலைஸ்டெர் குக் விலகுவர் என்று தெரிகிறது. அடுத்த வாரம் குக்கிற்கு 3வது குழந்தை பிறக்க உள்ளது. அவர் அதற்காக விடுப்பு கேட்டால் கட்டாயம் அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு விடுப்பு அளிக்கும்.

cook 1

இதுவரை அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விடுப்பு எதுவுமின்றி தொடர்ந்து இங்கிலாந்து அணிக்காக ஆடிவருகிறார். இந்நிலையில் மனைவியை கவனித்து கொள்வதற்காகவும், குழந்தை பிறக்கும்போது அருகில் இருக்கவும் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. எனவே, அவர் கண்டிப்பாக இந்தியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவார் என்று தெரிகிறது.

ஏற்கனவே, இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பார்ஸ்டோவ் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக அடுத்த போட்டியில் விளையாட மாட்டார். என்று அறிவிக்கப்பட்ட நிலையில், குக் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று தெரிவித்து இருக்கிறார்கள். எனவே அடுத்த போட்டியில் இளம் வீரர்களை இங்கிலாந்து அணியில் எதிர்பார்க்கலாம்.

cook

குக் அடுத்த போட்டியில் ஆடவில்லை என்றால் ஒரு மிகப்பெரிய சாதனை ஒன்றை குக் இழப்பார். அதாவது தொடர்ந்து 157 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடி முதல் இடத்தில உள்ளார். காயம் அடைந்தோ அல்லது சுய காரணங்களுக்கோ அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விலகியது இல்லை. இன்றுவரை அணியில் இருந்து நீக்கப்படாமலும் இருக்கிறார்.

- Advertisement -