பவுன்சர் போட்டு என்னை கொன்னுடாத ப்ளீஸ். அக்தரிடம் கெஞ்சிய பேட்ஸ்மேன் – அக்தர் வெளியிட்ட தகவல்

Akhtar
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் என்பதுமே நமக்கு ஞாபகத்திற்கு வருவது அவரது மின்னல் வேகப் பந்துவீச்சு தான். அவரது காலகட்டத்தில் புயல் வேகத்தில் பந்து வீசிய இவரை அத்தனை எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. முன்னணி பேட்ஸ்மேன்களில் தனது வேகத்தின் மூலம் அசரவைத்த சோயப் அக்தர் தற்போது தான் பந்துவீசிய திலேயே கடினமான பேட்ஸ்மேன் யார் என்பதை கூறியுள்ளார்.

Akhtar 1

- Advertisement -

2003ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மணிக்கு 161.3 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசிய அவர் இன்றளவும் அதிவேக பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் தான் பந்துவீசியதிலேயே கடினமான பேட்ஸ்மேன் யார் என்பது குறித்து அவர் கூறுகையில் : இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை குறிப்பிட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சச்சின், லாரா, பாண்டிங் போன்ற ஜாம்பவான்கள் எதிராக பந்து வீசி விட்டு முரளிதரனை அவர் குறிப்பிட்டது அனைவரும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்நிலையில் முரளிதரனுக்கு எதிராக நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை தற்போது அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறுகையில் : முரளிதரன் தான் நான் பந்துவீசியதிலேயே கடினமான பேட்ஸ்மென்.

Muralitharan 2

இதை விளையாட்டுக்கு புரியவில்லை கூறவில்லை. ஒரு முறை முரளிதரன் என்னிடம் வந்து நீ பவுன்சர் போட்டு என்னை கொன்று விடாதே நான் பேட்டிங் செய்யும்போது தயவுசெய்து பாலை கொஞ்சம் மேலே போடு என்று சொன்னார். நானும் அதன்படி கொஞ்சம் மேலே பந்தை வீச அவர் என்னுடைய பந்தை அடித்து விட்டார். பின்னர் என்னிடம் வந்து நான் தவறுதலாக உன் பந்தை அடித்து விட்டேன் சாரி என்று என்னிடம் சொன்னார்.

Akhtar 2

முரளிதரன் சர்வதேச கிரிக்கெட்டில் 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1261 ரன்களையும் 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 674 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அக்தர் சர்வதேச கிரிக்கெட்டில் 444 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement