இவர் கேட்டால் தோனி நிச்சயம் ஃபேர்வெல் மேட்ச் விளையாட வாய்ப்பிருக்கு – அக்தர் ஓபன் டாக்

Akhtar-3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி இரவு தனது ஓய்வு அறிவிப்பினை இன்ஸ்டாகிராம் மூலம் மிக எளிமையாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பை அடுத்து கிரிக்கெட் உலகம் பரபரப்பானது. அவரின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியது மட்டுமின்றி அவரது நினைவுகளையும் பகிர ஆரம்பித்து அவருக்கான வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

7

தோனியின் ஓய்வு முடிவினை அடுத்து கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என உலகெங்கிலும் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துவர தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர் தோனி குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் இந்தியாவுக்காக அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பையில் தோனி விளையாட கோரிக்கை வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசியதில் : தோனி 2021 டி20 உலகக் கோப்பை தொடரை விளையாடி இருக்கலாம் என நினைக்கிறேன். அவருக்கு ரசிகர்களிடம் உள்ள ஆதரவும், அன்பும், அங்கீகாரமும் தான் நான் இதைச் சொல்லக் காரணம் இருந்தாலும் அவரது ஓய்வு தனிப்பட்ட முடிவு அதில் நாம் தலையிட முடியாது.

akhtar 4

சிறிய நகரான ராஞ்சியில் இருந்து கிளம்பிய அவர் இந்தியாவே தன் ஆட்டத்தின் மூலமாக கவர்ந்திழுத்து திரும்பிப் பார்க்க வைத்தவர். அவர் ஓய்வு பெற்றாலும் அவரை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு இந்திய கிரிக்கெட் அணிக்காக தனது பங்களிப்பை அளித்துள்ளார். ஒருவேளை இந்தியப் பிரதமர் மோடி தோனியிடம் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் விளையாட கோரிக்கை விடுத்தால் அதை தோனியால் மறுக்க முடியாது.

Modi

அதனால் தோனி நிச்சயம் மீண்டும் விளையாடுவார். இது மாதிரியான நிகழ்வுகள் பாகிஸ்தானில் நடந்துள்ளன. மேலும் தோனிக்கு விருப்பமிருந்தால் இந்தியாவில் அவருக்கான ஃபேர்வெல் போட்டி நடத்தப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கெல்லாம் தோனிக்கு மோடி தனிப்பட்ட வகையில் கோரிக்கை வைக்க வேண்டும் என்பது அவருடைய கருத்து.

Advertisement