இந்திய அணியா இது என்னால் நம்ப முடியவில்லை. கண்களை துடைத்து பார்த்தேன் – சோயிப் அக்தர் நக்கல்

Akhtar
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அடிலெய்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்வி பெறும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஏனெனில் முதல் இன்னிங்சில் போது சிறப்பாக பேட்டிங் செய்த இந்திய அணி 244 ரன்கள் குவித்தது. அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய அணியை 191 ரன்களில் சுருட்டியது, இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்தி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Ind

- Advertisement -

ஆனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டாவது இன்னிங்சை முடித்தது. இந்நிலையில் இந்திய அணியின் இந்த தோல்வி குறித்தும், பேட்டிங் செயல்பாடுகள் குறித்தும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது கருத்தை தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் கூறுகையில்

நேற்று காலை தூங்கி எழுந்தவுடன் டிவியை ஆன் செய்தேன். அப்போது நான் இரண்டாம் நாள் ஆட்டத்தை முழுவதுமாக பார்க்கவில்லை. ஸ்கோர் போர்டை பார்த்தவுடன் இந்திய அணி 369 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது என நினைத்தேன். அதனால் எனது கண்களை துடைத்து பார்த்தேன். அப்போது 36 ரன்கள் என்றும் அதற்கு பக்கத்தில் / குறி இருப்பதையும் நான் கவனித்தேன்.

9 பேட்ஸ்மேன்கள் அவுட் என்றும் ஒருவர் ரிட்டயர்ட் ஆகியிருக்கிறார் என தெரிந்துகொண்டேன். நிச்சயம் இந்த தோல்வி தர்மசங்கடமான ஒன்று. ஒட்டுமொத்தமாக இந்திய அணி பேட்டிங்கில் தோல்வியடைந்துள்ளது. இந்தியாவோடு ஒப்பிடும் போது பாகிஸ்தான் அணி மேல் என்றுதான் தோன்றுகிறது என அத்தர் நக்கலாக இந்திய அணி கலாய்க்கும் வகையில் ஒரு கருத்தினை தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துக்கு பதிலளித்து உள்ள இந்திய ரசிகர்கள் பலரும் இணையத்தில் பாகிஸ்தான் அணியை இந்திய அணியோடு ஒப்பிட்டு பேசியது தவறு. எங்களுடன் ஒப்பிட்டு பேசும் அளவிற்கு பாகிஸ்தான் வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும். மேலும் எப்போதும் இந்திய அணியை குறித்து பேசும் நீங்கள் விமர்சிக்காமல் பேசு விரும்புகிறோம் என நேரடியான காட்டமான கருத்துக்களை இந்திய அணி ரசிகர்கள் முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement