நான் ஏன் இந்திய வீரர்களை பாராட்டக்கூடாது. அவர்கள் செய்த சாதனையை இல்லை என்று கூற முடியுமா ? – அக்தர் காட்டம்

Akhtar
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் சமீப காலமாக இந்திய வீரர்களை பற்றி மட்டுமே பேசி வருகிறார். முன்னாள் இந்திய வீரரான சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, லட்சுமணன் போன்ற பலரையும் விமர்சித்தும் பாராட்டியும் பேசி வருகிறார் அதனை தாண்டி அவர் ஒரு யூடியூப் பக்கத்தை நடத்தி வருகிறார்.

akhtar

இந்த பக்கத்திற்கு அவ்வப்போது நடக்கும் கிரிக்கெட் நிகழ்வுகளை ஒப்பிட்டு பேசி வருவார் . இதேபோல் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை பாராட்டி பேசியிருந்தார் குறிப்பாக விராட் கோலி தான் தற்போது உலகில் இருக்கும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் எனவும் அதேபோல் ரோகித் சர்மா தான் உலகில் இருக்கும் மிகச் சிறந்த ஒரு நாள் பேட்ஸ்மேன் எனவும் பேசியிருந்தார்

- Advertisement -

தனது நாட்டு வீரர்களை விட்டுவிட்டு இந்திய வீரர்களை இவர் பாராட்டி அதற்காக அந்த நாட்டு ரசிகர்கள் இடையேயும் வீரர்கள் இடையேயும் கடும் எதிர்ப்பு கிளம்பியது இதற்கெல்லாம் சற்றும் சளைக்காமல் அந்த விமர்சனங்களுக்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளார் சோதித்து பார்த்தார் அவர் கூறுகையில் ….

Kohli

விராட் கோலி இந்திய வீரர்கள் என்பதற்காக நான் எப்படி அவரை பாராட்டாமல் இருக்க முடியும். 70 சதங்களை அடித்து இருக்கிறார் அவருக்கு எதிரான கிரிக்கெட் வீரர் தற்போதைய கிரிக்கெட் உலகில் இல்லை. உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் அவர்தான்.

Rohith

விராட் கோலி ஒரு இந்தியர் என்பதால் மட்டுமே அவரை நான் புகழ்ந்து இருக்கவே கூடாது என்பதை போல் நீங்கள் நினைக்கிறீர்கள். இதுபோன்ற வெறுப்பை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். ரோகித் சர்மாவும் சர்வதேச கிரிக்கெட்டில் நட்சத்திர வீரர் தான் நாம் ஏன் அவர்களை புகழக் கூடாது? என்று தெரிவித்துள்ளார் சோயிப் அக்தர்.

Advertisement