கங்குலி நிச்சயம் இதுக்கு ஒதுக்கமாட்டார். அவர்கள் நினைப்பது நடக்காது – சோயிப் அக்தர் ஓபன் டாக்

Akhtar
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிந்ததும் அடுத்த 2023 ஆம் ஆண்டு முதல் அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

Ganguly

- Advertisement -

மேலும் அந்த தொடரில் டெஸ்ட் போட்டிகளில் நான்கு நாட்கள் நடைபெறும் இது குறித்த விவரங்கள் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்திருந்தது. இந்நிலையில் அது குறித்து ஏற்கனவே கங்குலி தெரிவித்த கருத்தில் : இதனை திட்டமிட்டு ஆராய்ந்தால் தான் தெரியும் மற்றபடி இப்பொழுது எந்த கருத்தையும் கூற முடியாது என்று ஒரு கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் கூறியதாவது : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல் ஐசிசி இந்த யோசனை ஒருபோதும் செயல்படுத்த முடியாது. கங்குலி ஒருபோதும் இதற்கு ஒப்புதல் அளிக்க மாட்டார் ஏனெனில் 4 நாள் டெஸ்ட் போட்டிக்கான யோசனை என்பது சரியானது கிடையாது.

Ganguly-2

கங்குலி அதில் ஆர்வம் காட்ட மாட்டார் ஒரு புத்திசாலி மனிதர் அவர் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவரின் யோசனைகள் சரியாகவே எப்போதுமிருக்கும் அவரது கணிப்பில் இருந்து எந்த விடயமும் மாறாது என்று அக்தர் பேட்டி அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement