தோனி என்னங்க முடிவு எடுக்குறாரு. அதை போன வருஷமே சொல்லி இருக்கனும் – தோனியை சீண்டிய அக்தர்

Akhtar-3
- Advertisement -

கொரோனா காரணமாக கலவரையறையின்றி ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தற்போது இந்திய வீரர்கள் தங்களது ஓய்வு நேரத்தை வீட்டிலேயே கழித்து வருகின்றனர். மேலும் உலகஅளவிலும் கிரிக்கெட் போட்டிகள் எப்போது துவங்கும் என்று தெரியாததால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்றைய Helo Live-வில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிவேக பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் பகிர்ந்துகொண்ட தகவல்களில் முக்கியமானவை:

Akhtar

- Advertisement -

1.கொரோனாவில் இருந்து விரைவில் உலகம் வெளியே வரவேண்டும்.

2.எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று பார்க்காமல் அனைவரையும் நான் நேசிக்கிறேன். நான் மிகவும் மென்மையான மனநிலை கொண்டவன், வெளியில் இருந்து பார்க்கும்போது ஆக்ரோஷமான பந்து வீச்சாளராக தெரிகிறேன்.

3.ஷாரூக்கான் எனது மூத்த சகோதரரைப் போன்றவர், அதே போல் அமீர்கானும். சல்மான் கொஞ்சம் வித்தியாசமானவர். பாலிவுட் நட்சத்திரங்களை புகழ்ந்து பேசுவதால் எந்த பிரச்சனையும் எனக்கில்லை. நான் உண்மையான இஸ்லாத்தை நம்புகிறேன். என் இதயத்தில் உள்ளதை பேச நான் யாரிடமிருந்தும் அனுமதி கேட்க வேண்டியதில்லை; அக்தர்.

- Advertisement -

4.இயற்கை பேரழிவுகளின் போது நான் இந்தியர்களுக்கும் நன்கொடை அளித்தேன்.

5.விராட் கோலியை, லாரா, சச்சின் மற்றும் டிராவிட் ஆகியோருடன் ஒப்பிட வேண்டாம். இந்த சகாப்தத்தில் உள்ள பேட்ஸ்மேன் லாரா, சச்சின், பாண்டிங் ஆகியோரைப்போல அவ்வளவு வலிமையானவர் அல்ல. தரமான கிரிக்கெட் கிட்டத்தட்ட முடிந்தது.

- Advertisement -

6.2019 உலகக்கோப்பையில் தோல்வியடைந்த உடனேயே தோனி தனது ஓய்வை அறிவித்திருக்க வேண்டும்.

Dhoni

7.என்னிடம் ஒரு மில்லியன் டாலர் இருந்தால், அதில் பாதி பணத்தை மும்பை மக்களுக்கு நன்கொடையாக அளித்திருப்பேன்.

- Advertisement -

8.சேவாக், கம்பீர் போல நல்ல மனித நேயம் கொண்டவர்கள் யாருமில்லை. ஆனால், டிவி முன்பு வரும்போது மோசமாக பேசுகிறார்கள்.

9.சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை 120 அடித்து விராட் கோலி முறியடிப்பார். அவர் உறுதியுடன் விளையாடுகிறார்.

10.மேட்ச் பிக்சிங் பற்றி என்னிடம் பேச வரமாட்டார்கள், ஏனென்றால் நான் அவர்களை உதைப்பேன் என்று அவர்களுக்குத் தெரியும். ஒருவன் என்னிடம் சூதாட்டம் குறித்து பேச வந்தான். நான் அவன் கண்ணை உடைத்தேன். என்னால் ஒருபோதும் எனது ஆன்மாவை பணத்திற்காக விற்க முடியாது.

11.டெஸ்ட் கிரிக்கெட்டை ஒருநாள் போட்டியுடன் ஒப்பிட வேண்டாம், அவை வெவ்வேறு விதமானவை. அனைத்து கிரிக்கெட் வடிவங்களையும் ரசிகர்கள் ரசிக்கட்டும். நாங்கள் மைதானத்தில் மட்டுமே போராடுகிறோம்.

12.சேவாக் சொன்ன “அப்பா அப்பாதான், மகன் மகன்தான்” என்ற வாக்குவாதம் மைதானத்தில் நடக்கவேவில்லை.

இந்த உரையாடலில் தோனி குறித்து பேசியுள்ள அக்தர் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்த உடனே தோனி ஓய்வினை அறிவித்திருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த கருத்திற்கு ரசிகர்கள் பலரும் தங்களது விமர்சையான கருத்துக்களை பதிலாக அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement