இவரின் ஓய்வு அறிவிப்பு தற்போது தேவையில்லாத ஒன்று. மேலும் முட்டாள் தனமானது – அக்தர் விளாசல்

Akhtar
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் கடந்த 2009ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன்பின் இவர் பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் செயல்பட்டு வந்தார்.

- Advertisement -

பிறகு சூதாட்ட விவகாரம் காரணமாக பாகிஸ்தான் அணியிலிருந்து தடை செய்யப்பட்ட இவர் மீண்டும் அணியில் இடம்பெற்று சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்நிலையில் அவர் தற்போது டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென ஓய்வு அறிவித்துள்ளார்.

மேலும் தற்போது நான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்த இருப்பதால் நான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இது விரும்புகிறேன் என்று அமீர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான அக்தர் அமீரின் இந்த முடிவு குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

amir

அமீர் ஓய்வு முடிவில் சற்று அவசரப்பட்டு விட்டார். டெஸ்ட் கிரிக்கெட் தான் உண்மையில் ஒருவீரரின் திறமையை நிரூபிக்கும் போட்டியாகும். அதுவும் 27-28 வயது என்பது வீரர்கள் நல்ல உடற்தகுதியுடன் ஜொலிக்கும் நேரம் இந்த வயதில் அமீர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது என்னை பொறுத்தவரை முட்டாள்த்தனம் என்றே கூறுவேன். இருப்பினும் இது அவருடைய தனிப்பட்ட விடயம் எனவே இனிவரும் அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் என்று அக்தர் கூறினார்.

Advertisement