என் வாழ்க்கையில் மோசமான தருணம் இதுதான். இந்திய அணியின் வீரரான இவரை நான் அவுட் ஆக்கியிருக்க கூடாது – அக்தர் வருத்தம்

Akhtar
- Advertisement -

சும்மா இருக்கும் நேரங்களில் எல்லாம் சோயப் அக்தருக்கு இந்திய வீரர்களை பற்றி பேசுவதுதான் வேலை போல் இருக்கிறது. இந்த கரோனா சமயத்தில் கிட்டத்தட்ட பல நாட்களாக இந்தியாவையும், இந்திய வீரர்களை மட்டுமே பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். மீண்டும் அதே போல் தனது பேச்சை கொண்டுவந்து சமூக வலைதளங்களில் வைரல் ஆகி இருக்கிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அக்தர் தனது யுடியூப் சேனல் மூலமாக கிரிக்கெட் குறித்த தனது கருத்துக்களை தொடர்ந்து கொடுத்துக்கொண்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

Akhtar

- Advertisement -

அவரின் ஒருசில கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்தாலும் கருத்துக்கள் இந்திய ரசிகர்களுக்கு முரணாகவே உள்ளது. அந்தவகையில் இந்த முறை 2003 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரை தான் அவுட் ஆகி விட்டதாக மறைமுகமாக கூறியுள்ளார் அக்தர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 2003ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் ஒரு லீக் போட்டியில் மோதியது. அந்த போட்டியிலும் வழக்கம்போல் இந்திய அணியே வெற்றிபெற்றது.

இதுவரை இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த போட்டி இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்காத அளவிற்கு இடம்பிடித்துள்ளது என்றால் அது மிகையல்ல. முக்கியமான அந்த போட்டியின்போது சச்சின் டெண்டுல்கர் 98 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதுவும் அக்தரிடம் இழந்துவிட்டார்.

Akhtar

அவர் வீசிய ஒரு பவுன்சர் சிக்சருக்கு செல்லாமல் கேட்ச் ஆகிவிட்டது. இதனால் தனது சதத்தையும் இழந்தார் சச்சின். இதனை வைத்து தற்போது பேசியுள்ளார் சோயப் அக்தர். இதுகுறித்து அவர் கூறுகையில் : சச்சின் டெண்டுல்கர் அந்த போட்டியில் 98 ரன்களில் அவுட் ஆனது எனக்கு சோகத்தை ஏற்படுத்தியது. அந்த போட்டியில் அவர் மிகவும் அதிரடியாக ஆடினார். அவர் சதம் அடித்து இருக்கவேண்டும் .அவர் சதம் அடிப்பார் என்று நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன்.

- Advertisement -

நான் வீசிய பவுன்சரில் அவர் சிக்ஸர் அடிப்பார் என்று நினைத்தேன் .ஆனால் அவரால் அடிக்க முடியவில்லை . ஏனெனில் முந்தைய போட்டியின்போது நான் அவ்வாறு வீசிய பந்தை சிக்சருக்கு விளாசி இருந்தார் சச்சின் டெண்டுல்கர் என்று கூறியுள்ளார். இந்த போட்டியில் சோயப் அக்தரின் பந்துவீச்சை இந்திய அணி தவிடு பொடியாக்கியது.

sachin

அவர் வீசிய 10 ஓவர்களில் 72 ரன்கள் விளாசப்பட்டது. மேலும், 274 ரன்களை எளிதாக துரத்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 75 பந்துகளில் சச்சின் டெண்டுல்கர் 98 ரன்கள் விளாசி இருந்தார். அந்த போட்டியில் சச்சின் மற்றும் சேவாக் ஆகியோர் ஆப் சைடில் அடித்த இரு சிக்ஸர்கள் இன்றளவும் சிறப்பான ஷாட்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சோயிப் அக்தர் பாக்கிஸ்தான் அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகள், 163 ஒருநாள் போட்டிகள் மற்றும் 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றுவரை கிரிக்கெட்டில் அதிவேக பந்துவீச்சு சாதனையாகவே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement