நான் மட்டும் பவுலிங் போட்ட கோலி எல்லாம் க்ளீன் போல்ட்டாகி வெளியேறுவார் – சவால் விட்ட வேகப்பந்து வீச்சாளர்

Kohli-1
- Advertisement -

இந்திய அணியின் கேப்டனும், முன்னணி வீரரான விராட் கோலி பேட்டிங்கில் சர்வதேச அளவில் பல சாதனைகளை படைத்து வருகிறார். தனது பேட்டியின் மூலம் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தி வரும் கோலி தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது உலகின் நம்பர் ஒன் வீரராக திகழ்கிறார். தற்போதைய கால கட்டத்தில் பேட்டிங்கில் அவரை அடித்துக் கொள்ள ஆளில்லை என்று கூறும் அளவிற்கு அவர் தனது பேட்டிங் மூலம் கிரிக்கெட் உலகினை கட்டிப் போட்டுள்ளார் என்றால் அது மிகையாகாது.

Kohli-2

- Advertisement -

மேலும் இந்திய அணியின் மூன்று வகை கிரிக்கெட்டிலும் ரன் குவிப்பது மட்டுமின்றி அணியை வழி நடத்துவதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பந்துவீச்சாளர்கள் கோலி ரன் குவிப்பதை தடுத்து நிறுத்துவது சிரமம் என்று கலங்கி வரும் நிலையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர் விராட் கோலியை வீழ்த்த முடியும் என்று பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும் உலகிலேயே அதிவேக பந்து வீச்சாளர் என்று பெயர் பெற்றவருமான அக்தர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வர்ணனையாளராகவும், யூடியூப் சேனல் மூலம் கிரிக்கெட் கருத்துக்களை கூறும் விமர்சகராகவும் அவர் பல கருத்துகளை ரசிகர்களுக்கு முன்வைத்து வருகிறார்.

Akhtar

அந்த வகையில் தற்போது சமூக வளைதளத்தில் விராட் கோலி அவுட் செய்வது எப்படி என்ற கேள்வி எழுந்த நிலையில் அதற்கு பதிலளித்த அக்தர் : விராட் கோலிக்கு ஒருவேளை நான் பந்து வீசினால் பவுலிங் கிரீசை முழுவதுமாக பயன்படுத்தி பந்துவீசுவேன் அப்போது பந்து ஸ்டம்புக்கு வெளியே ஸ்விங் ஆகி செல்லும் அந்த பந்தை அடிக்க முடியாது. அப்புறம் அவர் அவுட்டாக முடியவில்லை என்றால் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அவரை அவுட்டாக்குவேன் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அவரது இந்த கருத்து ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. ஏனெனில் உலக தரம் வாய்ந்த கோலிக்கு எதிராக பல்வேறு பந்து வீச்சாளர்களும் கிட்டத்தட்ட 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி உள்ளனர். ஆனால் அதையெல்லாம் அசால்டாக அடித்து ரன் குவித்து வரும் கோலிக்கு அக்தர் எல்லாம் பெரிய விஷயம் இல்லை என்றும் அக்தரை அவர் நிச்சயம் விளாசுவார் என்று தங்களது கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.

Akhtar 1

மேலும் இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு மைதானங்களிலும் சதமடித்து இருக்கும் கோலி எந்த நாட்டிலும் எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement