இந்திய அணிக்கு கிடைத்த அதிசய வீரர் இவர். டேலன்ட் தைரியம் ரெண்டுமே இருக்கு – அக்தர் புகழாரம்

Akhtar
- Advertisement -

இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. அண்மையில் நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2-வது போட்டி தற்போது புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா 8.1 ஓவர்கள் வீசி 54 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். அவரது இந்த அற்புதமான பந்துவீச்சும் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது.

மேலும் கேப்டன் கோலி அவரது பந்துவீச்சில் ஒரு கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். இல்லையெனில் அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருப்பார். பிரசித் கிருஷ்ணாவின் இந்த சிறப்பான செயல்பாடு குறித்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வரும் வேளையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அக்தர் தனது யூடியூப் பக்கத்தில் அவரை பாராட்டி உள்ளார்.

prasidh-krishna

இது குறித்து அவர் பேசுகையில் : அவர் கிருஷ்ணன் இல்லை. அவர் ஓர் அதிசயம். அவர் வீசிய முதல் மூன்று ஓவர்கள் அதிக ரன்கள் சென்றிருந்தாலும் மீண்டும் அவரை கோலி பந்துவீசிய செய்தபோது அவர் ஒரு அதிசய வீரராக மாறி சிறப்பாக பந்து வீசி இருந்தார்.

prasidh krishna 1

இந்திய அணிக்கும் அவரது அந்த பௌலிங் கம்பேக்காக அமைந்தது. ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு உரிய திறனும், தைரியமும் அவரிடம் உள்ளது. அதனால் தான் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பிறகும் மீண்டும் சிறப்பாக அவரால் பந்துவீச முடிந்தது என அத்தர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement