இந்திய வீரரான இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வெகுவிரைவில் வீழ்த்துவார் – அக்தர் நம்பிக்கை

Akhtar

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. அதன் பின்னர் அணியில் சில மாற்றங்கள் ஏற்பட்டது.ஜடேஜாவின் கட்டைவிரல் காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் சேர்க்கப்பட்ட அக்சர் பட்டேல் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டார்.அதுவே அவரது முதல் டெஸ்ட் போட்டியாகும். அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் பெற்றார். மேலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளையும் நான்காவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை எடுத்து மொத்தமாக 3 டெஸ்ட் போட்டிகளில் 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

Axar

கூடுதல் சிறப்பாக அவர் மொத்தமாக ஆடிய ஆறு இன்னிங்சில் நாலு இன்னிங்ஸ்களில் 45 விக்கெட் ஹால் எடுத்துள்ளார். அணியின் வெற்றிக்கு அவரும் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் அக்சர் பட்டேலை புகழ்ந்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ளார். அனைவரும் கூறும் படி பிச்சு காரணமாக அக்ஷர் பட்டேல் அவ்வளவு விக்கெட்டுகளை கைப்பற்ற வில்லை.

உண்மையில் அக்சர் பட்டேல் மிகப் பெரிய புத்திசாலி ஆட்டத்தை தன் கவனத்தில் எப்படி வைத்துக் கொள்வது என்பதை அவர் முழுமையாக கற்று வைத்துள்ளார். அவரது பிடியில் இருந்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் தப்பிக்க முடியவில்லை. அதனாலேயே வந்த வேகத்தில் பெவிலியன் நோக்கி சென்றார்கள்.

இதுபோல தொடர்ந்து இன்னும் சில போட்டிகள் அக்ஷர் பட்டேலுக்கு வழங்கப்பட்டால் அதிவேக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரராக அவர் வந்துவிடுவார் அதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.

- Advertisement -

axar

புகழ்பெற்ற ஜாம்பவான் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் அக்தரே அக்ஷர் பட்டைகளை பாராட்டியது இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.