மிகச்சிறந்த பேட்ஸ்மேன் யார் ? சச்சின்னா ? விராட் கோலியா ? – நேரடியாக பதிலளித்த அக்தர்

Akhtar
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட்டின் கடவுள் என இந்திய ரசிகர்களால் வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் படைக்காத சாதனைகளே இல்லை என்று கூறலாம். 24 ஆண்டு கால கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகளை தன்னுள் வைத்திருக்கும் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச அரங்கில் 100 சதம் விளாசிய வீரர் மட்டுமின்றி ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்திலும் அதிக ரன்களை குவித்த வீரராக திகழ்கிறார்.

Sachin 1

- Advertisement -

சச்சின் இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் விராத் கோலியின் வருகை இந்திய அணிக்கு பலம் சேர்த்தது என்று கூறலாம். இளம் வீரராக அறிமுகமான விராட் கோலி தனது முதிர்ச்சியான ஆட்டத்தால் வெகுவிரைவிலேயே முன்னணி வீரராக மாறினார். அதன்பிறகு காலம் நகர நகர சச்சினுடன் ஒப்பிடப்பட்ட விராட் கோலி தொடர்ந்து சச்சினின் பல சாதனைகளை முறியடித்தார்.

மேலும் தற்போது உள்ள வீரர்களின் சச்சினின் 100 சதம் சாதனையை நெருங்க கூடிய ஒரே நபராக விராட் கோலி பார்க்கப்படுகிறார். இந்நிலையில் விராட் கோலி, சச்சின் இருவரில் யார் ? சிறந்த பேட்ஸ்மென் என்பதுபோல கேள்விகள் அவ்வப்போது எழுவதுண்டு. அதற்கு பதிலளித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறுகையில் :

அந்த காலத்தில் பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க மிகவும் சிரமப்படுவார்கள். அப்போது இருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் வேறு இப்போது இருக்கும் பவுலர்கள் வேறு. அதே போன்று சச்சின் விளையாடிய காலத்தில் டிஆர்எஸ் முறை எல்லாம் கிடையாது. மேலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இப்போது உள்ள விதிமுறைகள் உள்ளன. அப்போதெல்லாம் 10 ஓவர்களை கடந்த பின்னும் பந்து ஸ்விங் ஆகும்.

sachin

ஆனால் இப்போதைய கிரிக்கெட் முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது. எனவே சச்சினும் கோலியையும் ஒப்பிடுவது தவறு. சச்சின் விளையாடிய காலத்தில் இருந்த சூழ்நிலைகள் வேறு, விராட் கோலி விளையாடும் காலத்தில் இருக்கும் சூழ்நிலைகள் வேறு என சச்சினை புகழ்ந்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement