இந்திய அணியில் தோனிக்கு பதிலாக இவரே அவரது இடத்தில் சரியாக பொருந்துவார் – அக்தர் கணிப்பு

Akhtar
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது யூட்யூப் சேனல் மூலம் கிரிக்கெட் குறித்த பல்வேறு கருத்துக்களை அவ்வப்போது வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அவர் இந்திய அணி வீரர்கள் குறித்தும், இந்திய அணி குறித்தும் அவ்வப்போது தனது கருத்துக்களை வெளியிட்டு வருவதை அக்தர் வாடிக்கையாக வைத்துள்ளார்.

india

- Advertisement -

அதன்படி தற்போது அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்திய அணியின் முன்னணி வீரரான தோனிக்கு மாற்று வீரர் இந்திய அணிக்கு கிடைத்து விட்டார் என்றும் அவர் வேறு யாரும் இல்லை மனிஷ் பாண்டே தோனியின் இடத்திற்கு பொருத்தமானவர் என்றும் தெரிவித்துள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் அபாரமாக கைப்பற்றியது.

இதனை அடுத்து இந்திய அணி குறித்து புகழ்ந்து பேசிய அக்தர் கூறியதாவது : இந்தியாவிற்கு கடைசியாக தோனி கிடைத்துவிட்டார். மனிஷ் பாண்டே அந்த இடத்திற்கு பொருத்தமான பொருத்தமானவராக என் கண்களுக்கு தெரிகிறார். ஷ்ரேயாஸ் ஐயரும் மிக நிறைவான வீரராக தான் தெரிகிறார். இதன் மூலம் இந்திய அணி பேட்டிங் கடைசி வரை நன்றாக இருக்கிறது.

Pandey 1

இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் நிறைய ஆடுகின்றனர் அதன்மூலம் அழுத்தமான சூழ்நிலையில் எவ்வாறு ஆடுவது என்பதையும் அவர்கள் கற்றுக் கொண்டுள்ளனர். அதனால் இவர்கள் பெரிய பெயர்களை பற்றி எல்லாம் யோசிக்காமல் முக்கியமான நேரத்தில் சிறப்பாக விளையாடுகின்றனர் என்று அக்தர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement