ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரை ஜெயிக்கணுனா இதை செய்தே ஆகனும் – அட்வைஸ் கொடுத்த அக்தர்

Akhtar
- Advertisement -

இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோத இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு பயிற்சிகளை செய்து வருகிறது. மேலும் இந்த தொடருக்கான மூன்று விதமான அணி வீரர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு தொடருக்காக ஆயத்தமாகி வருகின்றனர்.

INDvsAUS

இந்த தொடர் வருகிற 27ம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இது தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில் இந்திய அணி இத்தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவால் அளிக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை மீண்டும் இந்திய அணியால் ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் தொடரில் வீழ்த்த முடியும். ஆனால் அதற்கு இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆக வேண்டும். அப்படி அவர்கள் சரியாக விளையாடவில்லை என்றால் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது கடினம் தான் என்று கூறியுள்ளார்.

Ind-1

மேலும் கோலி முதல் டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் நாட்டிற்கு திரும்புவதால் மற்ற மிடில் ஆர்டர் வீரர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும். முதல் போட்டி பகலிரவு போட்டியாக இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணியின் நம்பிக்கை அதிகரித்து விடும். அதனைத் தொடர்ந்து வரும் போட்டிகளிலும் அவர்கள் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என்று அக்தர் இந்திய வீரர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ind

கடந்த முறை இந்திய அணி 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 71 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement