“கிரிக்கெட்டின் கடவுள்” என்று சொல்லுமளவுக்கு அவர் என்ன பண்ணிட்டாரு – மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய அக்தர்

Akhtar
- Advertisement -

சமீபகாலமாக பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் இந்திய முன்னாள் வீரர்களை மறைமுகமாகவும் நேரடியாகவும் விமர்சித்து கொண்டிருக்கிறார். சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக், ராகுல் டிராவிட், வி வி எஸ் லட்சுமணன் என யாரையும் விட்டுவைக்கவில்லை.
எல்லாருமே என் முன்னால் கத்துக்குட்டிகள் ஆக இருந்தவர்கள் என்றெல்லாம் பேசி வருகிறார்.

Akhtar

- Advertisement -

அதற்கு, இந்திய ரசிகர்களும் பதிலடி கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இருப்பினும் தொடர்ந்து எதாவது சர்ச்சை கருத்துக்களை கூறிவருகிறார். இந்நிலையில் மேலும் சச்சினை பற்றி தேவையில்லாமல் தற்போது பேசி உள்ளார் அக்தர்.

அதுவும் சச்சின் டெண்டுல்கரை கிரிக்கெட் கடவுள் என்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்றெல்லாம் பேசியுள்ளார். அவர் கூறுகையில்… சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டின் கடவுள் என்று பலரும் கூறுகிறார்கள். அவர் உண்மையாகவே கிரிக்கெட்டின் கடவுளா? அதனை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

Akhtar 1

என்னையும் அதுபோன்ற எந்த விதத்திலும் அவர் அங்கீகரிக்கவில்லை. நானும் அவரும் வேறு வேறு மாதிரியான விளையாட்டு வீரர்கள். அவரை நான் முதல் பந்திலேயே விக்கெட் எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அதே மாதிரி வீழ்த்தியும் இருக்கிறேன். அவரை கிரிக்கெட்டின் கடவுள் என்றெல்லாம் கூறாதீர்கள் என்று தேவையில்லாமல் பேசியிருக்கிறார் சோயிப் அக்தர்.

sachin

கடந்த 5 மாதமாக கொரோனவைரஸ் காலத்தில் இப்படித்தான் பல வார்த்தைகளை உதிர்த்து வருகிறார் அக்தர். இதற்கு இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அவருக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Advertisement