- Advertisement -
உலக கிரிக்கெட்

இலங்கையின் நச்சத்திர சுழற்பந்துவீச்சாளரை 1 ஆண்டுக்கு பந்துவீச தடைசெய்த ஐ.சி.சி – காரணம் இதுதான்

இலங்கை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான அகிலா தனஞ்ஜெயா இலங்கை அணிக்காக கடந்த 2012 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமானார். இதுவரை 36 ஒருநாள் போட்டிகளிலும், 22 டி20 போட்டிகளில் மற்றும் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான இவர் தற்போது 12 மாதம் அதாவது ஒரு வருடம் ஐசிசி-யால் தடை செய்யப்பட்டுள்ளார். 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 33 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது .இந்நிலையில் அவர் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் அவரது பந்துவீச்சு சந்தேகத்திற்கு உள்ளானது.

- Advertisement -

மேலும் ஐசிசியின் விதிமுறைகளை மீறி அவர் பந்து வீசுவதாக புகார் கொடுக்கப்பட்டது. அதன்படி ஐசிசி நடத்திய ஆய்வில் அவரது பந்துவீச்சு விதிமுறைகளை மீறி இருந்ததாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு இதே போன்று இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் இவர் பந்து வீசியதால் புகார் செய்யப்பட்டார். தற்போது 2 ஆண்டுக்குள் 2 முறை புகார் தெரிவிக்கபட்டுள்ளதால் அவர் ஒரு ஆண்டுக்கு தடை செய்யப்பட்டுள்ளார் என்று ஐசிசி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
Published by