அண்மையில் இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது ஒரு மாத ஓய்வுக்குப் பிறகு வங்கதேச அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது.
நான் யாராகவும் மாற விரும்பவில்லை :
இந்த டெஸ்ட் தொடர் முடிந்து இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், அதன்பிறகு ஆஸ்திரேலியா சென்று அங்கு நடைபெறவுள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட இருப்பதால் இந்தத் தொடர்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோன்று இந்த தொடர்களில் எல்லாம் வெற்றி பெற்றால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எதிர்வரும் இந்த நீண்ட தொடருக்கான ஆயுத்த பணிகளை தற்போது இந்திய அணி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வாகியுள்ள ஆகாஷ் தீப் அனைவரது மத்தியிலும் பேசப்படும் வீரராக மாறியுள்ளார். ஏனெனில் காயமடைந்துள்ள முகமது ஷமிக்கு மாற்று வீரராக இந்திய அணியில் இணைந்துள்ள அவர் ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்த ஆண்டு அறிமுகமாகி ஒரு போட்டியில் மூன்று விக்கெட்டுகளை எடுத்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார்.
இதனால் இவர் மீது அனைவரது மத்தியிலும் இருந்து அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதேபோன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலியும் இவரை அடுத்த முகமது ஷமி என்று பாராட்டியுள்ளதால் கூடுதல் எதிர்பார்ப்பு இவரிடம் உள்ளது. இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தற்போது பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஆகாஷ் தீப் : நான் முஹமது ஷமியாக மாற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் எந்த ஒரு வீரரை போலவும் வர வேண்டும் என்று நினைக்கவில்லை. என்னுடைய செயல்பாட்டை சரியாக வெளிப்படுத்தி நானாக என்னுடைய திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். வேறு ஏதாவது ஒரு வீரருடன் போட்டி போடும் எண்ணம் இருந்தால் நிச்சயம் அது நமக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க : கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உ.கோ தொடரால் பி.சி.சி.ஐ-க்கு கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?
நான் அதைப் பற்றி எல்லாம் யோசிக்க போவது கிடையாது. என்னுடைய பலத்தில் கவனம் செலுத்த இருக்கிறேன். என்னுடைய கட்டுப்பாட்டில் என்ன இருக்கிறதோ அதே வைத்து சிறப்பாக செயல்பட்டு நிச்சயம் இந்திய அணிக்காக வெற்றியை தேடி தருவேன் என ஆகாஷ் தீப் கூறியது குறிப்பிடத்தக்கது.



