- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஷிகர் தவான், கவுதம் கம்பீர் கூட செய்யாத சம்பவத்தை இங்கிலாந்து மண்ணில் செய்த ஆகாஷ் தீப் – விவரம் இதோ

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின்போது நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய நைட் வாட்ச்மேனாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் களமிறங்கினார். ஏனெனில் போட்டியின் கடைசி சில நிமிடங்களில் முக்கிய வீரரை இழந்து விடக்கூடாது என்பதற்காக பவுலரை நைட் வாட்ச்மேனாக இப்படி ஆட வைப்பது வழக்கம்.

கம்பீர், தவான் கூட செய்யாத சாதனையை நிகழ்த்திய ஆகாஷ் தீப் :

அந்த வகையில் போட்டியின் இரண்டாம் நாள் இறுதியில் நைட் வாட்ச்மேனாக வந்த ஆகாஷ் தீப் விக்கெட்டை இழக்காமல் அந்த நாளை நிறைவு செய்ததோடு மட்டுமின்றி மூன்றாம் நாள் ஆட்டத்தில் மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 94 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவியதால் தற்போது இந்திய அணி நல்ல நிலையில் இருக்கிறது. இந்த போட்டியில் ஆகாஷ் தீப் அடித்த அரைசதம் மூலம் குறிப்பிட்ட சில தனித்துவமான சாதனைகளை அவர் செய்துள்ளார்.

அந்தவகையில் இங்கிலாந்து மண்ணில் முன்னாள் வீரர்களான வீரர்களான ஷிகர் தவான், கௌதம் கம்பீர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் கூட செய்யாத ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதாவது இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 10 இன்னிங்ஸ்களுக்கு மேல் பேட்டிங் செய்துள்ள தவான், கௌதம் கம்பீர் போன்ற பேட்ஸ்மன்கள் கூட அங்கு அரைசதம் அடித்ததில்லை.

- Advertisement -

அதுமட்டுமின்றி கடந்த பல ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் நம்பிக்கையான ஆல்ரவுண்டராக திகழ்ந்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் கூட இதுவரை டெஸ்ட் போட்டிகளில் அங்கு அரைசதம் கடந்தது கிடையாது. ஆனால் ஒரு பவுலராக களமிறங்கி நைட் வாட்ச்மேனாக விளையாடிய ஆகாஷ் தீப் இங்கிலாந்து மண்ணில் அரைசதத்தை பதிவு செய்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் முடிஞ்ச கையோட கே.எல் ராகுல் எடுத்த அந்த முடிவு தான் அவர் அசத்த காரணம் – அபிஷேக் நாயர் கருத்து

ஏற்கனவே பந்துவீச்சில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் இந்த போட்டியில் பேட்டிங்கிலும் தனது திறனை வெளிக்காட்டியுள்ளதால் இனிவரும் காலங்களில் அவர் தொடர்ச்சியாக இந்திய டெஸ்ட் அணியுடன் பயணிக்க பிரகாசமான வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -