
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதலில் இன்னிங்சில் :
587 ரன்கள் என்கிற பிரமாண்ட ரன் குவிப்பை வழங்கியது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 269 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 89 ரன்களையும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களையும் குவித்தனர். அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்க்ஸை துவங்கியதும் மூன்றாவது ஓவரின் நான்காவது பந்தில் பென் டக்கெட்டையும், அதற்கு அடுத்த ஐந்தாவது பந்தில் ஆலி போப்பையும் அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தினார்.
ஏற்கனவே முதல் போட்டியில் விளையாடிய முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு பணிச்சுமை காரணமாக இந்த இரண்டாவது போட்டியின் போது ஓய்வு கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக மீண்டும் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ஆகாஷ் தீப் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு அசத்தலான துவக்கத்தை தந்திருக்கிறார்.
கடந்த ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அவர் 7 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியின் இரண்டாம் நாளான இன்று மூன்றாவது செஷனில் தற்போது வரை இங்கிலாந்து அணி 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வரும் வேளையில் இன்னும் 562 ரன்கள் பின்தங்கியுள்ளதால் இந்திய அணியின் வெற்றிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : முதல் ஆசிய கேப்டனாக இங்கிலாந்து மண்ணில் சரித்திர சாதனையை நிகழ்த்திய சுப்மன் கில் – விவரம் இதோ
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருப்பதால் இந்த இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணி விளையாடி வருகிறது.