நிச்சயமா இந்த விஷயத்தை நெனச்சி சாம்சனும், அபிஷேக் சர்மாவும் ஃபீல் பண்ணுவாங்க – ஆகாஷ் சோப்ரா

Akash-Chopra
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டியிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி ஏற்கனவே இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஆட்டம் வரும் 12-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

வாய்ப்பை வீணடிச்சிட்டு இருக்காங்க :

இந்நிலையில் இந்த வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் துவக்க வீரர்களாக களமிறங்கி வரும் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறி உள்ளது அவர்களது இடத்தினை பறிக்கும் அபாயத்திற்கு கொண்டு செல்லும் என முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த தொடரில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் இருக்கிறார்கள். முதல் இரண்டு போட்டிகளில் அவர்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தும் அவர்களால் பெரிய பங்களிப்பை வழங்க முடியவில்லை.

மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடும் திறமை அவர்கள் இருவரிடமே இருக்கிறது. ஆனாலும் அவர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது எதிர்காலத்தில் அவர்கள் இடத்தை இழக்கும் அபாயத்திற்கு கொண்டு செல்லும்.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே டி20 தொடரில் விளையாட ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் வரிசைகட்டி காத்திருக்கின்றனர். அது தவிர்த்து இஷான் கிஷனும் துவக்க வீரருக்கான போட்டியில் நிச்சயம் வருவார். எனவே இத்தனை வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் கிடைக்கும் வாய்ப்பை இப்படி வீணடித்து விட்டோம் என்று அவர்கள் இருவருமே வருத்தப்படலாம் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இதையும் படிங்க : பேட்ஸ்மேனா இருக்காதன்னு அட்வைஸ் சொன்ன கம்பீருக்கு நன்றி.. ஆட்டநாயகன் விருது வென்ற நிதிஷ் ரெட்டி

தற்போது முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட அணி விளையாடி வரும் வேளையில் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரது மோசமான ஆட்டம் நிச்சயம் அவர்களது இடத்திற்கு அபாயத்தை ஏற்படுத்தும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement