- Advertisement -
ஐ.பி.எல்

சி.எஸ்.கே அணியில் அவரை ஏன் வச்சிருக்காங்கனு எனக்கு சுத்தமா புரியல – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடிய 9 ஆட்டங்களில் 2 வெற்றிகள் மற்றும் 7 தோல்விகளுடன் 4 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் நீடிக்கின்றது. ஏற்கனவே கடந்த ஆண்டு பிளே ஆப் வாய்ப்பை இழந்த சி.எஸ்.கே அணியானது இந்த ஆண்டு நிச்சயம் மீண்டும் மிகச் சிறப்பான கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சென்னை அணியில் இருந்து அவரை நீக்கனும் : ஆகாஷ் சோப்ரா

ஆனால் இந்த தொடரின் ஆரம்பத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் அடுத்தடுத்து தோல்விகளை பெற்று பின்னடைவை சந்தித்தது. அதன் பின்னர் காயம் காரணமாக கெய்க்வாட் வெளியேறியதால் தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றார்.

- Advertisement -

அவரது தலைமையில் நிச்சயம் அந்த அணி வெற்றி பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மீண்டும் அந்த அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இன்று தங்களது பத்தாவது லீக் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக சென்னை அணி குறித்த சில கருத்துகளை முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது எனக்கு கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது. இந்த சீசனை பொருத்தவரை அவர்கள் கிட்டத்தட்ட வெளியேறிவிட்டார்கள். ஆனால் அவர்கள் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப அனைவரும் ஒன்றிணைந்து விளையாட வேண்டும்.

- Advertisement -

சிஎஸ்கே அணியில் உள்ள வீரர்களில் ஒரு சில வீரர்கள் மட்டுமே தற்போது சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால் அந்த தனி நபர்களின் ஆட்டத்தை வைத்து அவர்களால் வெற்றி பெற முடியாது. எனவே நல்ல குழுவாக அவர்கள் மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டும். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சாம் கரண் வெளியே அமர வைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவரால் இந்த தொடரில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

இதையும் படிங்க : வெறும் 64.31 வெச்சுருக்க சஞ்சய் மஞ்ரேக்கருக்கு எங்க அண்ணனை பேச தகுதியில்ல.. கோலியின் தம்பி பதிலடி

இந்த தொடரின் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 21 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதுமட்டும் இன்றி விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. எனவே அவரை வெளியில அமர வைத்துவிட்டு மீண்டும் டேவான் கான்வேயை கொண்டு வரலாம். அதேபோன்று அஸ்வின் கூட மீண்டும் பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வரலாம் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -