- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலியின் தடுமாற்றத்திற்கு காரணம் இதுதான்.. அதனால தான் அவரால் பெரிய ஸ்கோர் அடிக்கமுடியால – ஆகாஷ் சோப்ரா

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நடைபெற்று வரும் 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சற்று தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக இருந்து வருகிறது. டி20 கிரிக்கெட்டில் மூன்றாவது வீரராக களமிறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர் இந்த உலகக்கோப்பை தொடரில் துவக்க வீரராக விளையாடி வருகிறார்.

இப்படி துவக்க வீரராக களமிறங்கி விளையாடி வரும் இவ்வேளையில் தான் அவர் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறார். குறிப்பாக இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளில் கடந்த போட்டியில் மட்டுமே 24 ரன்கள் அடித்திருந்த விராட் கோலி வங்கதேச அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 37 ரன்கள் அடித்தார்.

- Advertisement -

இருப்பினும் தன்னுடைய விக்கெட்டை எளிதாக இழந்து வெளியேறினார். இந்த போட்டியிலும் அவர் 1 பவுண்டரி 3 சிக்ஸர் என அதிரடி காட்டி இருந்தாலும் தன்னுடைய பாணியை மாற்றிக்கொண்டு ஆக்ரோஷமாக விளையாட விரும்பியதால் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்நிலையில் அவரது இந்த அணுகுமுறை தான் அவரை பெரிய ஸ்கோரை அடிக்க விடாமல் செய்து வருவதாக இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலியால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் போனதற்கு காரணம் அமெரிக்க ஆடுகளங்கள் தான்.

- Advertisement -

அந்த ஆடுகளங்களில் பேட்டிங் செய்யும்போது அவருக்கு சிரமம் இருந்தது. அதேபோன்று தனது பாணியை மாற்றிக்கொண்டு ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்று அவர் தற்போது விளையாடிய வருகிறார். அப்படி விளையாடுவது தான் அவருடைய கூர்மையான ஆட்டத்தை இழந்து அவரால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் போகிறது.

இதையும் படிங்க : 21 ரன்ஸ்.. உடைந்த 14, 8 வெற்றிநடை.. அசுரன் ஆஸ்திரேலியாவை தெறிக்க விட்ட ஆப்கானிஸ்தான்.. 2023க்கு பழி தீர்த்து சரித்திர சாதனை வெற்றி

இந்த அணுகுமுறையை மாற்றிக்கொண்டு வழக்கம் போல் சிறிது நேரம் களத்தில் நின்று அதன் பின்னர் அதிரடியாக விளையாடினால் அவரால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியும் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -