- Advertisement -
ஐ.பி.எல்

ரோஹித் சர்மா மட்டுமல்ல அவரோடு சேர்ந்து மற்றொரு வீரரும் மும்பை அணியில் இருந்து வெளியேறுவார் – ஆகாஷ் சோப்ரா

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக கேப்டன்சி செய்து வந்த ரோகித் சர்மா ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்து ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகாரமான கேப்டனாக திகழ்ந்து வந்தார். இந்நிலையில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ரோகித் சர்மா கேப்டன் பதிவிலிருந்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஹார்டிக் பாண்டியா நியமிக்கப்பட்டிருந்தார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்த அவரை ட்ரேடிங் முறையில் தங்களது அணிக்கு கொண்டுவந்த மும்பை அணியின் நிர்வாகம் அவரை இப்படி புதிய கேப்டனாக பாண்டியா மாற்றியது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

- Advertisement -

அதோடு சாம்பியன் கேப்டனான ரோகித் சர்மா சாதாரண வீரராக விளையாடியதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுபோன்ற சில செயல்களால் மும்பை இந்தியன்ஸ் அணியின் மீது ரசிகர்கள் அதிருப்தியை நேரடியாக வெளிப்படுத்தினார்கள்.

அதோடு பாண்டியா இந்தியா முழுவதும் எங்கு விளையாடினாலும் அவருக்கு எதிராக ரசிகர்கள் கோஷங்களையும் எழுப்பினர். பந்தியாவின் தலைமையில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணியானது 14 போட்டியில் 10 போட்டியில் வெற்றி பெற்று கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது.

- Advertisement -

இந்நிலையில் நிச்சயமாக அடுத்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்று கூறப்படும் வேளையில் அதனை உறுதி செய்யும் வகையில் ஆகாஷ் சோப்ரா சில தகவல்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது கடைசி ஆட்டத்தை விளையாடிவிட்டார் என்று நினைக்கிறேன். மீண்டும் அவர்கள் இணைந்து விளையாடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

இதையும் படிங்க : உண்மையை சொன்னதுக்கு இப்படியா செய்விங்க.. விராட் கோலி ரசிகர்கள் ரொம்ப மோசம்.. சைமன் டௌல் வேதனை

ஒருவேளை அது தவறாக கூட இருக்கலாம். ஆனால் கட்டாயம் ரோகித் சர்மா வெளியேறுவார் என்று நினைக்கிறேன். அதே போன்று ரோகித் சர்மாவுடன் இணைந்து இஷான் கிஷனும் வெளியேறுவார். அவருக்கு 15.5 கோடி என்பது அதிக பணம் என்பதால் அவரை வெளியேற்றிவிட்டு பின்னர் மீண்டும் அணியில் குறைந்த தொகைக்கு எடுக்க மும்பை அணி முயற்சிக்கும் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -