ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக துபாய் சென்றடைந்துள்ளது. அந்த வகையில் இந்த தொடரின் முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இந்திய அணியானது அடுத்ததாக நியூஸிலாந்து அணிக்கு எதிராக கடைசி லீக் போட்டியில் விளையாட இருக்கிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக ஹார்டிக் பாண்டியா தான் பிஸ்தா : ஆகாஷ் சோப்ரா
இந்த தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணமாக சிறப்பான பந்துவீச்சு தான் காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை 241 ரன்களுக்கு இந்திய அணி சுருட்டவே அடுத்ததாக இந்திய அணி எளிதாக 42 ஓவர்களிலேயே அந்த இலக்கினை சேசிங் செய்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஐ.சி.சி போட்டிகள் என்று வந்தாலே ஹார்டிக் பாண்டியா தான் மிகச் சிறப்பாக பந்துவீசி உள்ளதாக சில புள்ளி விவரங்களை இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் யார்? என்று கேட்டால்,
பலருக்கும் பிரெட் லீ, ஜாகிர் கான், மலிங்கா, மெக்ராத், ஸ்டார்க் போன்ற பெரிய பெரிய வீரர்களின் பெயர்கள் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் அதை எல்லாம் மறந்து விட்டு ஹார்டிக் பாண்டியாவை முதலில் கவனத்தில் கொள்ளுங்கள். ஏனெனில் ஹார்டிக் பாண்டியா இதுவரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஐ.சி.சி போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அவரை விட மற்ற பந்துவீச்சாளர்கள் குறைவாகத்தான் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள். பாண்டியாவிற்கு பாகிஸ்தான் அணி என்றாலே ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். அதன் காரணமாகவே அவர் மிகச் சிறப்பாக பந்து வீசுகிறார்.
இதையும் படிங்க : சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய உச்சத்தை தொட காத்திருக்கும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா – விவரம் இதோ
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் கூட அதிரடியாக விளையாடி வந்த கிளாசன் விக்கெட்டை பாண்டியா வீழ்த்தியதால் தான் இந்திய அணிக்கு ஒரு மிக பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. என்னை பொறுத்தவரை ஹார்டிக் பாண்டியா மிகச் சிறப்பான ஒரு வீரர் என்று ஆகாஷ் சோப்ரா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



