சி.எஸ்.கே அணியில் இருந்து வெளிய போன ருதுராஜ் கெய்க்வாட் இந்திய ஏ அணியில் தேர்வானது எப்படி? – ஆகாஷ் சோப்ரா கேள்வி

Akash Chopra
- Advertisement -

கடந்த மார்ச் 22-ஆம் தேதி இந்தியாவில் துவங்கிய நடப்பு 18-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக களம் கண்ட ருதுராஜ் கெய்க்வாட் ஆரம்பகட்ட போட்டிகளிலேயே காயமடைந்தார். அதன்பின்னர் ஒரு சில போட்டிகளில் விளையாடிய அவர் தனது காயம் தீவிரமடைந்ததால் ஐபிஎல் தொடரின் பாதியிலேயே விலகி இருந்தார். அதன் காரணமாக மீண்டும் தோனி கேப்டனாக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

ருதுராஜ் கெய்க்வாடுக்கு என்ன ஆனது? : ஆகாஷ் சோப்ரா கேள்வி

கடந்த ஆண்டு பிளே ஆப் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே அணியானது இம்முறையும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசியில் இருக்கும் வேளையில் இந்த ஆண்டிற்கான பிளே ஆப் வாய்ப்பையும் இழந்து விட்டது. இப்படி இரண்டு ஆண்டுகள் அடுத்தடுத்து பிளே ஆப் வாய்ப்பை சென்னை அணி இழப்பது இதுவே முதல் முறையாகும்.

- Advertisement -

எனவே சென்னை அணியின் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் இருந்து வருகிறது. அதோடு சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்தது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியுள்ள வேலையில் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அவர் இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் பயிற்சி போட்டிகளுக்கான இந்திய ஏ அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இதன் காரணமாக அவர் இங்கிலாந்து நாட்டிற்கு விரைவில் பயணிக்கிறார். இந்நிலையில் சிஎஸ்கே அணியில் காயம் என்று கூறி வெளியேறிய ருதுராஜ் கெய்க்வாட் தற்போது எப்படி இந்திய அணிக்கு தேர்வானார்? என்ற கேள்வியை இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா எழுப்பியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ருதுராஜ் கெய்க்வாட்டின் காயத்தின் உண்மை என்ன? என்பது தெரியவில்லை.

- Advertisement -

ஏனெனில் ஐபிஎல் தொடரில் பாதியில் விலகிய அவர் தற்போது எப்படி ஐபிஎல் தொடர் முடிவதற்கு முன்னதாகவே முழு உடற்தகுதியை பெற்றுள்ளார். அப்படி முழு உடற்தகுதி பெற்றிருந்தால் அவர் எஞ்சியுள்ள ஐபிஎல் தொடரில் ஏன் விளையாடவில்லை? இப்படி பல கேள்விகள் மர்மமாக இருக்கின்றன. இது குறித்து எந்த ஒரு தெளிவும் இங்கு இல்லை. உண்மையில் என்ன நடக்கிறது? என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

இதையும் படிங்க : உங்களை மாதிரி ஒரு வீரர் கிடைப்பது கஷ்டம்..ப்ளீஸ் அதை மட்டும் மாத்தாதீங்க.. ரிஷப் பண்டிற்கு – அஜய் ஜடேஜா கோரிக்கை

அதேவேலையில் தற்போது தோனி அடுத்த ஆண்டுக்கான சென்னை அணியை உருவாக்கி வருவதாக கூறுகிறார். சரியான அணியை விட்டு செல்ல வேண்டும் என்றும் நினைக்கிறார். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஆண்டு முழுவதும் ஐபிஎல் தொடரில் பங்கேற்காத வேளையில் அவர் எவ்வாறு அடுத்த ஆண்டு மீண்டும் இந்த வீரர்களை வைத்து கையாளப்போகிறார் என பல கேள்விகளை ஆகாஷ் சோப்ரா எழுப்பியுள்ளார்.

Advertisement