- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு.. இந்தியா போகும்ன்னு சொல்ல முடியலனாலும் வாய்ப்பிருக்கு.. ஆகாஷ் சோப்ரா

இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் அணி 2 – 2 என்ற கணக்கில் போராடி சமன் செய்தது. அதிலும் கடைசிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அசாத்தியமான வெற்றி பெற்றது. அதனால் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய புதிய பயணத்தை ஓரளவு வெற்றிகரமாக துவங்கியுள்ளது.

அந்த 2 வெற்றிகளால் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளிய இந்தியா 3வது இடத்தில் (46.67%) இருக்கிறது. முதல் 2 இடங்களில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இருக்கிறது. 2021, 2023 ஆகிய 2 அடுத்தடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு விராட் மற்றும் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா தகுதி பெற்று அசத்தியது.

- Advertisement -

2027 ஃபைனல் வாய்ப்பு:

ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணிலும் கடந்த ஆஸ்திரேலிய தொடரிலும் தோல்வியை சந்தித்த காரணத்தால் இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது. இந்நிலையில் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறும் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்ல முடியாது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஏனெனில் இந்திய அணி அடுத்த தலைமுறையில் காலடி எடுத்து வைப்பதாக அவர் கூறியுள்ளார்.

அதனால் அனுபவமின்மையால் ஃபைனலுக்குச் செல்வது கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. ” 2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா தங்களது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. அந்த 3 தொடர்களையும் நாம் வெல்வோம் என்று நான் கருதுகிறேன்”

- Advertisement -

ஆகாஷ் சோப்ரா கணிப்பு:

“குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நாம் வெல்வோம். நாம் அடுத்த தலைமுறையை நோக்கிய மாற்றத்தில் இருப்பதால் ஆஸ்திரேலியாவை தோற்கடிப்போம் என்று நேரடியாக சொல்ல முடியாது. வெளிநாட்டு தொடர்களைப் பொறுத்த வரை இலங்கையில் நாம் நிறைய புள்ளிகளைப் பெறுவோம் என்று எதிர்பார்க்கிறேன்”

இதையும் படிங்க: சிஎஸ்கே விட்டு நான் போக முடிவு பண்ணல.. ஆனா சிஎஸ்கே அணியிடம் அந்த தெளிவை கேட்டுருக்கேன்.. அஸ்வின் பேட்டி

“நியூசிலாந்தில் வெற்றி பெறுவது கடினம். அதை நாம் பரவாயில்லை என்று நினைப்போம். இங்கிலாந்தில் தொடரை சமன் செய்துள்ள நாம் எப்படியும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் டாப் 3 அல்லது 4 இடங்களுக்குள் இருப்போம். நாம் அடுத்த தலைமுறை மாற்றத்தில் இருப்பதால் கண்ணை மூடிக்கொண்டு இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்லும் என்று சொல்ல முடியாது. ஆனாலும் இந்தியா ஃபைனல் செல்வதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ள வலுவான அணி என்று சொல்வேன்” எனக் கூறினார்.

- Advertisement -