ஆஸ்திரேலியாவில் பட்டதே போதும்.. இங்கிலாந்திலாவது இந்த மாதிரி டீமை செலக்ட் பண்ணுங்க – ஆகாஷ் சோப்ரா அறிவுரை

Akash Chopra
- Advertisement -

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழந்தது. அதுமட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்தது. இதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணியின் மீது அப்போதே பெரியளவில் விமர்சனங்கள் இருந்தன.

இந்திய அணியின் அணித்தேர்வு இப்படித்தான் இருக்கனும் : ஆகாஷ் சோப்ரா

அதனை தொடர்ந்து தற்போது சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது இம்முறை இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் நகரில் நடைபெற்ற இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால் இளம் வீரர்களை கொண்ட இந்த இந்திய அணிக்கு இந்த தொடர் மிகவும் சவால் வாய்ந்த தொடராக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் அணித்தேர்வு எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது குறித்து முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : நாம் ஏற்கனவே ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது மிகப்பெரிய தோல்வியை சந்தித்தோம். அந்த தோல்வியிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை வைத்து இனிவரும் டெஸ்ட் அணியில் பந்துவீசத் தெரிந்த பேட்ஸ்மேன்களையும், பேட்டிங் தெரிந்த பந்துவீச்சாளர்களையும் கணிசமாக பிளேயிங் லெவனில் எடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டிருப்போம்.

- Advertisement -

அந்த வகையில் என்னை பொறுத்தவரை இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடர் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதினால் நான்கு முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களுடனும், ஒரு சுழற்பந்து வீச்சாளருடனும் செல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக மூன்று முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களையும், நான்காவது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாகூரையும் கொண்டு வரலாம். ஏனெனில் அவரிடம் பேட்டிங் செய்யும் திறனும் உள்ளது.

அதுமட்டுமின்றி நிதீஷ் ரெட்டியும் அணிக்குள் இருந்தால் அவரால் பேட்டிங் செய்வது மட்டுமின்றி பந்துவீச்சிலும் ஐந்தாவது வேகப்பந்து வீச்சாளராக செயல்பட முடியும். அதேபோன்று ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளராக ஜடேஜாவை நாம் அணியில் எடுக்கலாம். அப்படி எடுக்கும் பட்சத்தில் 6 பவுலர்கள் கிடைத்து விடுவார்கள்.

இதையும் படிங்க : இப்படி ஒரு விடயத்தை கனவிலும் எதிர்பார்க்கவில்லை.. மனம்திறந்து பேசிய சுப்மன் கில் – விவரம் இதோ

அதுமட்டுமின்றி ஜடேஜாவாலும் பேட்டிங்கில் கணிசமான அளவு ரன்களை குவிக்க முடியும் என்பதனால் அதுவே சரியான தேர்வாக இருக்கும். எனவே என்னை பொறுத்தவரை இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பந்துவீச்சாளர்களை நாம் எவ்வாறு தேர்வு செய்யப்போகிறோமோ அதை வைத்து தான் வெற்றியின் விகிதமும் இருக்கும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

Advertisement