மொயின் அலியிடம் “வலிமை பட அப்டேட்” குறித்து கேட்ட அஜித் ரசிகர் – வைரலாகும் வீடியோ

Moeen-Ali
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று 13-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களை குவித்துள்ளது. துவக்க வீரர் ரோகித் சர்மா அதிகபட்சமாக 161 ரன்களையும், ரகானே 67 ரன்களும் குவித்தனர். ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 33 ரன்களுடனும், அக்ஷர் பட்டேல் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

rohith

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின்போது பவுண்டரி லைனின் அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலியிடம் அஜித் ரசிகர்கள் கேள்வி கேட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை விஜய், அஜீத், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் நடிக்கும் படத்தின் அப்டேட்டுகள் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கேள்விகள் எழுப்பப்படும்.

அந்த வகையில் தற்போது அஜித் ரசிகர்கள் வலிமை படம் அப்டேட் குறித்து தொடர்ந்து சமூகவலைதளத்தில் விவாதித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது வரை அஜித் படம் வலிமை குறித்து எந்த அப்டேட்டும் இன்று வரை வரவில்லை. ஆனால் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ரசிகர்கள் அஜித் புகைப்பட அப்டேட் வேண்டும் என்று பதாகைகளுடன் வலம் வந்தனர்.

மேலும் பில்டிங் செய்துகொண்டிருந்த இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலியை அழைத்து “அலிபாய் வலிமை அப்டேட் ?” என்று ரசிகர் கேட்கிறார். அதனைக் கேட்ட மொயின் அலி அவர்கள் கேட்பது என்ன என்று தெரியாமல் சிரிக்கும்படி இந்த வீடியோ அமைந்துள்ளது.

- Advertisement -

தற்போது இணையத்தில் வெளியான இந்த வீடியோ காட்டுத்தீயாய் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து வீரர் இடமா இப்படி ஒரு கேள்வியைக் கேட்டீர்கள் என்பது போலவும் சிலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement