முன்னாள் இந்திய கேப்டன் மரணம்..! கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல்..!

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் கேப்டனுமான அஜித் வடேகர் உடல் நல குறைபாட்டால் நேற்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தன்று காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இவரது மறைவிற்கு சச்சின் கும்ப்ளே டிராவிட் உத்தப்பா கம்பிர் போன்ற வீரர்கல் சமூக வலைத்தளம் மூலம் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

wade

1941ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்தார் அஜித் வடேகர். வலது கை பேட்ஸ்மேனான அஜித் வடேகர் 1966 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம்பிடித்தார். இந்திய அணியின் 3ஆம் நிலை பேட்ஸ்மேனாக களமிறங்கிய இவர், இதுவரை 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1 சதம் உள்பட 14 அரை சதங்களுடன் 2113 ரன்களை குவித்துள்ளார். மேலும், இரண்டு ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ளார்.

- Advertisement -

இறுதியாக 1974 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடிய அஜித் வடேகர் பின்னர் அதே ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்றார். கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்ற பின்னரும் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராகவும், மேலாளராகவும், தேர்வுக்குழு தலைவரராகவும் இருந்துள்ளார்.மேலும், இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய அணிகளை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி இந்திய அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிகளை தேடி தந்தவர் அஜித் வடேகர்.

wade2

அதே போல கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகள் அறிமுகமான பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் முதல் கேப்டனாக இருந்த பெருமையும் இவரையே சாரும். மேலும், இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது, அர்ஜூனா விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல விருதுகளை அஜித் வடேகர் பெற்றுள்ளார்.

Advertisement