ஆர்.சி.பி அணிக்கு அவரே கேப்டனா இருக்கட்டும் அதுதான் கரெக்ட்டா இருக்கும் – அஜித் அகார்கர் கருத்து

Agarkar
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்த வருடம் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சிறிய அளவில் அல்லாமல் மெகா அளவில் நடைபெறும் இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் உலகில் இருந்து 590 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

IPL

- Advertisement -

இவர்களில் தரமான வீரர்களை கண்டறிந்து அவர்களை பல கோடி ரூபாய்களை செலவு செய்து வாங்க அனைத்து 10 அணிகளும் தயாராக உள்ளன. முன்னதாக இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பில் விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ் ஆகிய 3 நட்சத்திர வீரர்களை அந்த அணி நிர்வாகம் தக்கவைத்துள்ளது.

கேப்டன் யார்:
இருப்பினும் கடந்த வருடம் அந்த அணியின் கேப்டனாக இருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி அந்த பதவியில் இருந்து விலகியதால் தற்போது பெங்களூர் அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி நிலவுகிறது. அந்த அணி தக்க வைத்துள்ள 3 வீரர்களில் விராட் கோலியை தவிர்த்து கிளென் மேக்ஸ்வேல் மற்றும் சிராஜ் ஆகியோர் பெரிய அளவில் கேப்டன்ஷிப் அனுபவம் இல்லாதவர்களாக காணப்படுகிறார்கள்.

bharat 1
bharat RCB

எனவே ஐபிஎல் 2022 தொடருக்காக தங்கள் அணியின் கேப்டனை மெகா ஏலத்தில் தேர்வு செய்ய அந்த அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக ஏற்கனவே கேப்டன்ஷிப் அனுபவம் கொண்ட இந்தியாவின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர், ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் போன்றவர்களை எவ்வளவு கோடிகள் கொடுத்து வேண்டுமானாலும் தங்கள் அணிக்கு கேப்டனாக நியமிக்க அந்த அணி தயாராகி உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

மீண்டும் கோலி:
இந்நிலையில் அடுத்த கேப்டன் யார் என்ற மிகப் பெரிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேள்விக்கு இந்தியாவின் நட்சத்திர முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் ஒரு ஆலோசனையை தெரிவித்துள்ளார். அதாவது ஏற்கனவே கேப்டனாக இருந்த விராட் கோலியை வரும் சீசனில் கேப்டனாக நியமிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு. “கேப்டன்ஷிப் பதவியை மகிழ்ச்சியோடும் சிறப்பாகவும் செய்ய முடியும் என விராட் கோலி உணர்ந்தால் அவரே கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம். அது தான் இந்த பிரச்சினைக்கு மிகவும் எளிமையான தீர்வாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

srhvsrcb

ஒவ்வொரு சீசனின் இறுதியிலும் பார்க்கும் போது 12, 13 அல்லது 14 தரமான வீரர்களை வாங்கி வலுவான அணியை உருவாக்க பெங்களூரு நிர்வாகம் எப்போதுமே பணத்தை செலவழித்தது இல்லை. அவர்கள் எப்போதுமே டாப் 3 வீரர்களை வாங்க அதிக பணத்தை செலவழித்து விடுவார்கள் என்பதால் நல்ல மிடில் ஆர்டர் வீரர்களை வாங்க பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே அந்த தவறை இந்த வருடமும் செய்யக்கூடாது ” என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சாத்தியமா:
இது பற்றி அஜித் அகர்கர் மேலும் கூறியது பின்வருமாறு. “எப்போதுமே ஒரு சில வீரர்களுக்காக நீங்கள் மிகப்பெரிய தொகையை செலவழித்து விட்டால் அவர்கள் எவ்வளவு தரமானவர்களாக இருந்தாலும் கூட ஒரு சில போட்டிகளில் மட்டுமே வெற்றியை பெற்று தர முடியும். தொடரை வெற்றி பெற்று தர முடியாது” என கூறியுள்ளார். பொதுவாகவே ஐபிஎல் வரலாற்றில் ஒருசில ஸ்டார் வீரர்களை பல கோடி ரூபாய்களை செலவழித்து வாங்கும் அணியாக இருந்து வரும் பெங்களூரு அதன் காரணமாக மீதியுள்ள முக்கால்வாசி இடங்களில் விளையாட தரமான வீரர்களை வாங்குவதில்லை என அஜித் அகர்கர் கூறியுள்ளார்.

RCB

எனவே அந்தப் பிரச்சனை இந்த வருடம் ஏற்படாமல் இருக்க ஏற்கனவே தக்க வைத்துள்ள விராட் கோலியை கேப்டனாக நியமித்து அந்த மிச்ச பணத்தில் வெற்றிகளை தேடித் தரக் கூடிய பல தரமான வீரர்களை பெங்களூரு வாங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் கடந்த 2013 முதல் பெங்களூர் அணிக்காக தம்மால் முடிந்த அளவுக்கு முழுமூச்சுடன் கேப்டன்ஷிப் செய்து பேட்டிங்கில் மலைபோல ரன்களை குவித்த போதிலும் விராட் கோலியால் ஒரு கோப்பையை பெற்று தர முடியவில்லை.

அதனால் கடந்த பல வருடங்களாகவே கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த அவர் கடந்த வருடம் அந்த பதவியில் இருந்து விலகினார். மேலும் பணிச்சுமை காரணமாக இந்தியாவின் கேப்டன்ஷிப் பொறுப்பையே வேண்டாம் என ஒதுக்கித் தள்ளியுள்ள விராட் கோலி ஐபிஎல் தொடரில் மீண்டும் பெங்களூர் அணிக்காக கேப்டன்ஷிப் செய்வது சாத்தியமற்ற ஒன்றாகவே கருதப்படுகிறது.

Advertisement