ஒன்னுமே இல்லாத பிளாட் பிட்ச்களில் கூட ஈஸியா விக்கெட் எடுக்குறாரு – அகார்கர் புகழாரம்

agarkar

இந்திய கிரிக்கெட்டின் டெஸ்ட் அணியானது முன்பு எப்போதும் இல்லாத வகையில் தற்போது பவுலிங்கில் மிகச் சிறந்த அணியாக வலம் வருகிறது. தற்போதைய கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பவுலர்களை கொண்ட டெஸ்ட் அணியாகவும் இந்திய அணி திகழ்கின்றது. இந்திய அணியில் பும்ரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமத் சிராஜ், புவனேஸ்வர் குமார், முகமத் ஷமி, நவ்தீப் சைனி, பிரசித் கிருஷ்ணா போன்ற வலுவான பவுலர்களை கொண்ட யூனிட்டாக இந்திய அணி திகழ்கிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்த உடன் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். ஏனெனில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை 60 ஓவர்களில் ஆட்டமிழக்க வைத்த இந்திய அணி பிரமாதமான வரலாற்று வெற்றியை சுவைத்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போதைய இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தான் உலகின் சிறந்த பந்து வீச்சாளர்கள் கொண்ட அணி என்று பலரும் வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அஜித் அகர்கர் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை பாராட்டியது மட்டுமின்றி குறிப்பாக ஒருவரை புகழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

shami

பிளாட் ஆன பிட்ச்களில் கூட விக்கெட் வீழ்த்தக்கூடிய சிறப்பான பவுலராக முகமது ஷமி திகழ்கிறார். மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பந்து வீசினாலும் முகமது ஷமியின் பந்துவீச்சில் துல்லியம் அதிகமாக இருக்கிறது என்றும் அவர் எப்பேர்ப்பட்ட மைதானத்திலும் விக்கெட்டையும் வீழ்த்தும் திறனுடையவர் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement